பால்வெளிப் பாதையில்

 

சுரேஷ் ராஜகோபால்

பால்வெளிப் பாதையில் பயணப் பட்டேன்

முதலில் கதிரவன் ஒளி

கொஞ்சம் துரத்தியது

உற்சாகம் தாங்கவில்லை

உத்வேகம் குறையவில்லை

 

சில பொழுது கடந்த பின்னே

கூட வந்ததோ கும்மிருட்டு

அச்சம் தலைதூக்க

மிச்சமும் கரைந்தோட

பயணம் மட்டும் தொடர்ந்து

 

வழியிலே இரவு பகல் கிடையாது

போகுமிடமும் தெரியாது

கடக்குமிடமும் புரியாது

போகும் வேகமும் குறையாது

தாகம் பசி கிடையாது

 

கூட வருபவர் யாருமில்லை ஆனாலும்

இலக்கரியாப் பயணம் நிச்சயம்

வழி காட்ட நாதியில்லை

மொழி எதுவும் உதவாது

வாழ்ந்த வாழ்க்கையை மறக்க மாட்டேன்.

Series Navigationவிநோதினி புதிய சரித்திர புதினம் – முன்னுரைதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]