பிம்பம்

Spread the love

மஞ்சுளா

குளிர்ந்த பனியை

குடம் குடமாய்

ஊற்றிச் செல்லும்

இவ்விரவை

பரிகசித்தபடியே

நகருகின்றன

தனிமையின் புகைச்சல்கள்

இமைகளுக்குள்

நகரும் ஒளிமையத்தில்

நகராது இருக்கிறது

உன் பிம்பம்

புலன்கள் அற்று

இருக்க வேண்டியது

எது?

நான்

நீ

அல்ல

அற்ப சொற்பங்களுக்குள்

மீந்திருந்த ஒரு

துளியை

இப்போது

பருகிவிட்டேன்

ஆனால்

அது கடலாய்

என்னை

மூழ்கடித்துக் கொண்டிருப்பதை

நீ அறிவாயா?

புலன்கள் எங்கே?

தின்றுவிட்ட

மீன்கள்

கரை சேர்ந்து

 கொண்டிருக்கின்றன

உன் வரவில்

காத்திருக்கிறது

என் அரூபம்

      —       மஞ்சுளா

           மதுரை

Series Navigationசமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும்நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”