புதராகிய பதர்

Spread the love

உமா சுரேஷ்
வெட்ட வெட்ட மரம்

துளிர்த்து வளருமாமே…

இந்த விந்தையறியாது

உன் நினைவை

பலமுறை வெட்டி எரிந்தேன்

மறுபுறம் நீ

துளிர்த்து வளர்வதை மறந்து…

 

புதரென்று வேரறுக்கவும்

முடியவில்லை…

 

பதரென்று விட்டுவிடவும்

முடியவில்லை…

 

புதராயினும்,பதராயினும்

என்னை பதம் பார்க்காமல்

விட்டு விட்டாலே போதும்..

                              -உமா சுரேஷ்

Series Navigationமேசையாகிய நான்சூடேறும் பூகோளம்