புரட்சி எழ வேண்டும் !

This entry is part 8 of 13 in the series 20 மே 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

 

புரட்சி எழ வேண்டும் என்று நீ

முரசு கொட்டு கிறாய் !

உலகத்தை மாற்ற நாமெல்லாம்

கலகம் செய்கிறோம் !

பரிணாம வளர்ச்சி அதுதான்  என்று

விரைவாகச் சொல்கிறாய் !

உலகத்தை மாற்ற நாமெல்லாம்

கலகம் செய்கிறோம் !

ஆனால் அடி, தடி, உடைப்பு, தீ வைப்பு 

கடை  அடைப்பு,

வேலை நிறுத்தம் இவை என்றால்

எனக்குப் பிடிக்கா தென்று

உனக்குத் தெரியாதா ?

 

உடனே என் பெயரை நீக்கிவிடு

எதிர்க்கும் புரட்சிக் குழுவில் !

எல்லாம் நல்லதாய் முடியு மென

உனக்குத் தெரியாதா ?

எல்லாம்  இனிதாய் முடியும் !

இனிதாய் முடியும் !

மெய்யாகத்

தீர்வு உள்ளது உன்னிட மெனக்

கூறுவது  நீயே

திட்ட மென்ன சொல்வாய் ?

நீயும் பங்கெடு என்றென்னைத்

தூண்டுகிறாய்.

முடிந்ததைச் செய்கிறேன் !

 

வெறுப்பு மனம் கொண்டோர்க்கு

கறுப்புப் பணம் தா என்றால்,

காத்திரு என்று நான் நீங்குவேன்.

எல்லாம்  இனிதாய் முடியும் !

இனிதாய் முடியும் !

அரசியல் சட்டத்தை மாற்றுவதாய்

உரைப்பது நீ !

நாங்கள் யாவரும் உனது

மூளையை மாற்ற முனைகிறோம் !

கல் வெட்டு எழுத்தென்று

சொல்வது நீ !

 

கல்வெட்  டென்று நீ  கருதினால்

கற்பனை  மனதை விட்டு

மெய் உலகுக்கு வா !

மாசேதுங் படத்தை தூக்கிக் கொண்டு

வாசல் முன்னே காட்ட வந்தால்

வையத்தில்  யாரும் உன்னை

ஏறெடுத்துப் பாரார் !

தொல்லைகள் மெல்ல நீங்கி

நல்லதாய் முடியும்,

எல்லாம் நல்லதாய் முடியுமென  

உனக்குத் தெரியாதா ?

 

+++++++++++++++++++

Series Navigationசிறுபாணாற்றுப்படையில் பாணர்களின் வறுமைநிலைதொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *