புராதனத் தொடர்ச்சி

Spread the love

புராதனச் சம்பவங்கள் புத்தியில்

படிமமேறி நிகழ் வாழ்வில் நெளிந்து

உட்ப் புகவும், வெளி வரவும் முடியாது

உறக்கமற்ற சூனியத்தை ஒளிப் பிழம்புகளாய்

சுருட்டியள்ள .. நிலை குலைந்து புராதனமனைத்தும்

துடைத்தெறியும் வெறியில் புதியன பலவும்

படித்தறிந்து புகுத்தி வைக்க எத்தனிக்கும் மனதில்

புதியன எதுவும் புராதனத்துடனே ஒப்பிட்டு நிற்கும்…

தன்னுள்ப் புலம்பும் மனம்…

‘ புதியனவென்று எதுவும் இல்லை .. எல்லாம்,எல்லாம்

புராதனத்தின் தொடரே…. ‘

Series Navigationமெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்சொன்னேனே!