புலி ஆடு புல்லுக்கட்டு

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

புதிர்தான் வாழ்க்கை

புலியும் ஆடும் புல்லுக்கட்டும்

இருவர் இருவராய்
அக்கரை சேரவேண்டும் சேதாரமின்றி

புலியையும் புல்லையும் இக்கரையில் விட்டு

ஆட்டை அக்கரை சேர்த்து

பின் திரும்பி புலியை அக்கரை சேர்த்து

ஆட்டை இக்கரை சேர்த்து

பின் புல்லை அக்கரை சேர்த்து

திரும்பவும் ஆட்டுடன் அக்கரை சேர்ந்ததும்

அக்கரை சேரக் காத்திருந்த ஆடு

புல்லைத் தின்றது

ஆட்டைத் தின்ற புலி

பசியடங்காமல் என்னைத் தின்றது

கதை இப்படி முடிந்தது.

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationநானும் என் ஈழத்து முருங்கையும்பேசாமொழி – அக்டோபர் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது..