பூராம்  கவிதைகள்

 
 
1.
 
கவிதை விற்றவனின் பிரதிகள் 
காலவிதை உருமாற்றிய பிம்பம்
தன்னைத் தேடி காலம் தொலைத்து
காலமாகி கரைந்துபோக…
 
முடிவில்லா வெளியில் தானுமாகி
அவையுமாகி அவளுமாகி …
 
நீக்கமற நிறைந்த ஏதோவொன்றின்
மறுபிரதி நான்.
 
2.
 
எனக்குள் இருக்கும் என்னை
என்ன ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை
எப்படி ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை
நான் அறிந்துகொள்ள
அன்றாடம் மறவாமல் பேசும்
அந்தப் படிகட்டுகளுக்கும் தெரியும்
அவளோடு பயணித்த
அகம் சார்ந்த பயணத்தில் கடைசி வரை
அவள் பயணிக்கவே இல்லை!
முடிவில்லாப் பயணத்தில் படிகட்டுகள்
வருவதும் போவதும் மீண்டும் புதியவை
வருவதும் போவதும்
பேசிக் கொண்டே இருப்பேன்
மொழி இருக்கும்வரை நான் இருக்கும் வரை
அவள் இருக்கும் வரை
பேசி என்ன ஆகப் போகிறது ஒன்றுமில்லை
பேசாமல் என்ன ஆகப் போகிறது ஒன்றுமில்லை
ஒன்றுமேயில்லை என்பதறிய ஒன்றுமில்லாதவைகளை
ஒன்றுமில்லாமல் செய்து கொண்டே இருக்கிறேன்
ஒன்றுமில்லாமல்!
 
                                        
Series Navigationதில்லிகை | ஏப்ரல் 10 மாலை 4 மணிக்கு | பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் – அயோத்திதாசர் & அம்பேத்கர்முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?