பேசாமொழி பதிப்பகத்தின் புதிய புத்தகம் – ஒளி எனும் மொழி (ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்)

Spread the love

கூச்சமாகத்தான் இருக்கிறது. நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அது புத்தகக் காட்சியில் இந்தந்த அரங்குகளில் கிடைக்கிறது என்று நானே எழுத வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய, தமிழ்நாட்டில் வாசகர்களின் எண்ணிக்கையை காட்டிலும், எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே நானும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன், கொஞ்சம் வாங்கிப் படித்துவிடுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமும் இருப்பதை உணர்கிறேன். தவிர சென்ற ஆண்டு தமிழ் ஸ்டுடியோவின் புதிய பரிமாணமாக பேசாமொழி பதிப்பகத்தை தொடங்கினோம். சென்ற ஆண்டு யமுனா ராஜேந்திரனின் இலங்கையின் கொலைக்களம் புத்தகத்தை பதிப்பித்தோம். இந்த ஆண்டு ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் எழுதியிருக்கும் ஒளிப்பதிவு பற்றிய மிக முக்கியமான புத்தகமான ஒளி எனும் மொழி என்கிற புத்தகத்தையும் பதிப்பித்திருக்கிறோம். பேசாமொழி பதிப்பகம் என்பது முழுக்க முழுக்க திரைப்படம் சார்ந்த நூல்களை பதிப்பிக்கவே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இன்னும் நிறைய புத்தகங்களை பதிப்பிக்க உத்தேசித்துள்ளோம். எனவே நண்பர்கள் இந்த மூன்று புத்தகங்களையும் வாங்கி படித்து பேராதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையின் கொலைக்களம் – யமுனா ராஜேந்திரன் (பேசாமொழி பதிப்பகம்)

ஒளி எனும் மொழி – விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் (பேசாமொழி பதிப்பகம்)

நாடு கடந்த கலை – அருண் மோ. (தமிழ் ஸ்டுடியோ) (மெய்ப்பொருள் பதிப்பகம்)

இந்த மூன்று புத்தகங்களும் கீழ்க்கண்ட அரங்குகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

460: பரிசல் புத்தக நிலையம்
577: பனுவல் விற்பனை நிலையும்
583: வம்சி புக்ஸ்
519A: பூவுலகின் நண்பர்கள்
588: டிஸ்கவரி புக் பேலஸ்
111 – அம்ருதா பதிப்பகம்
கருப்பு பிரதிகள்.

Series Navigationகருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழ் ஸ்டுடியோவின் கையெழுத்து இயக்கம்…பாக்தாத் நகரத்தில் நடந்த சில சுவையான அனுபவங்கள்