பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…

.
கோவிந்த் கோச்சா

இந்த கட்டிடம் சென்னை, திருவான்மியூர் மின்சார ரயில் நிலையத்தின் கிழக்குப் புரம்…
பின்னாடி இருக்கும் சாக்கடையைப் பார்த்து முகத்தைச் சுழிக்க வேண்டாம்…
இது நாமே மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் கதை…

இது பக்ஹிங்காம் கால்வாயாக அகண்டு இருந்த , மாமல்லபுரத்தில் இருந்து இதன் வழியாக மூங்கில்களும் இன்ன பிற சாமன்களும் நீர்தடமாய் வந்த வழி தான்…

பெரும்பகுதி ரயில் நிலையத்திற்காக கட்டிட அடித்தளம் ஆன பின் மிஞ்சியது இந்த சாக்கடை…..

நாகரீகமற்று ( நமது கூற்றுப்படி… ) மேலாடை இன்றி இருந்த நம் முன்னோர்கள், சுத்தமாக பார்த்த பகுதி….
மேல்நாடு போல் நம் நாட்டை மாற்ற திட்டமிடும் நாகரீகத்தின் உச்ச மனிதர்களாகிய நாம் தான் நாசம் செய்து கொண்டிருக்கிறோம்…

இதில் நாம் சாதிப்பது என்ன…? நீர்தடத்தையும் மரங்களையும் அழித்து காங்கிரீட் வனத்தில் நீர் நில ஆதாரம் எப்படி இருக்கும்….
இப்படியே தொடர்ந்தால், சிங்காரச் சென்னை என்பது, மேனி மினுக்கடி… உள்ளப் புழுக்கடி கதை தான்….

Series Navigationரமணி கவிதைகள்மாயங்களின் யதார்த்த வெளி