பைபிள் அழுகிறது

Spread the love

image.png

சிஜெயபாரதன்கனடா

நானூறு ஆண்டுகளாய்

அமெரிக்க

நாகரீக நாடுகளில்

கறுப்பு இன வெறுப்பு விதை

முளைத்து மாபெரும்

ஆலமரமாய் வளர்ந்து கிளைவிட்டு

விழுதுகள் தாங்கி

ஆழமாய்ப் பூமியில் வேரிட்டு

உள்ளது.

நாள்தோறும் கொலை

நடந்து வருவது நாமறிந்ததே !

கறுப்பு இனம்

விடுதலை பெற்றாலும்,

தற்போது

கறுப்பும் வெள்ளையும் சமமல்ல !

வெறுப்பும்,

வேற்றுமையும்

வெள்ளைக் கோமான்கள்

குருதியில் இருக்குது.

சட்டம்

நீக்க முடிய வில்லை

சமயம்

நீக்க முடிய வில்லை.

சமூகம்

நீக்க முடிய வில்லை.

ஜன நாயக அரசும்

நீக்க முடிய வில்லை.

வெள்ளை மனத்திலே கறுப்பு

இனத்தார்

தாமரை இலைத் தண்ணீரே !

கைகளைக் கட்டி

கழுத்தை நெரித்துக் கொல்வது,

முதலில்

மூன்றாம் தரக் கொலையெனத்

தீர்ப்பு !

பிறகு இரண்டாம் தரமானது 

இப்போது !

இது திட்டமிட்ட 

முதல் தரக் கொலைக் 

குற்றமில்லையா ? 

முன்னூறு ஆண்டுகளாய்

ஆதிமுதலே

வெள்ளைக் கோமான்கள் 

மூளையில் 

செதுக்கி வைத்திருந்த

நிரந்தரத் தீர்ப்பு !

கறுப்பு இனத்தான்  

தனியாகத்

தானே சுமக்கிறான்

தனது சிலுவை மரத்தை !

கறுப்பு இன வெறுப்புக் கொலையைக்

கண்டு, கண்டு

குரானும் அழுகிறது.

பைபிளும் அழுகிறது.

குறளும் அழுகிறது.

ஆனால்

வெள்ளை மாளிகை

மோசஸ்

பைபிளைக் காட்டி நியாயமெனக்

கூறுகிறார்.

+++++++++++++++++

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்கவிதைகள்