போதிதர்மர் தமிழரா…? ஆரியரா…?

Spread the love


நிறைய தமிழ் திரை ரசிகர்கள் போதிதர்மர் யார் என்பது பற்றிய வினவலிலும் அவர் தமிழர் என்ற பெருமிதத்திலும், வந்த செய்திகளால், நான் விக்கி பீடியாவிடம் கேட்க , கிடைத்த பதில்கள் அதிக சுவாரசியமாக இருந்தன…
நம்ம ஊரை , தமிழக கோடுகளுக்குள், ஆண்ட பலர் எப்படி டிஎன்ஏ –மூலக் கூறால் தமிழர் இனம் இல்லையோ அது போலவே, போதிதர்மரும் அக்மார்க் தமிழரா என்பது மிகப் பெரிய கேள்குறியே…
ஆம்,…
பல்லவர்களின் ஆதியாக, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் வருகிறார்… பரத்வாஜா கோத்திரமாகிறார்…..
அதுதாங்க பல்லவர்கள் மூலம் ஆரியர்கள் என்று போகிறது…. அப்ப, போதிதர்மர் ஆரிய டிஎன்ஏ கொண்டவராகிறார்…

அதனால், இவரை நாம் தமிழர் என்று முன்னிறித்தி பெருமை கொள்ள இயலாது… ஆனால் தமிழ்மன்னர் ( மன்னர் தமிழர் அல்ல.. ) பாரம்பரியத்தில் ஒரு ஷ்த்ரிய வம்சம் சேர்ந்தவர், ஆரியர் என்றே ஆராய்ச்சி கூற்றுகள் சொல்கின்றன…

பல்லவ சாம்ராஜ்யத்தில் இடையில் குழந்தை இல்லா நிலையில், யானைமாலை போட்டு மன்னரானவருக்கு – நந்திவர்மன் …? – நந்திவர்மனுக்கு முன்பே போதி தர்மர் தோன்றியுள்ளதால், போதிதர்மரை தமிழர் டிஎன்ஏ கொண்டவர் என்றும் சொல்ல முடியாது…..

அதுவும் போக, இடையில் அப்படி ஒரு வெற்றிடம் – அதாவது யானை மாலை போட்ட கதை – இருப்பதால் போதி தர்மரின் டி என் ஏ ஒரு இடத்தில் நின்று போயிருக்கும்…

அதே மாதிரி, சிலோன் படையெடுப்பை சிங்கள் மன்னர் ”மானவம்மா” வுடன் சேர்ந்து செய்து அங்கே ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகியிருக்கிறார், நரசிம்மவர்ம பல்லவர்.
இவரது பெயரால் இருப்பது தான் மாமல்லபுரம். அவருக்கு மாமல்லன் என்ற பெயருண்டு. அந்த சிங்கள மன்னனுக்காக படையெடுத்து அவர்தம் அரசாட்டி இலங்கையில் நிறுவிடவும் நரசிம்ம பல்லவர் உதவியுள்ளார்.

எப்படியோ, ஆனால் தமிழன் ஒருவன் யானையால் மாலைபோட்டு பல்லவ மன்னர் ஆனதால் , நந்திவர்மனை அழிக்க வேண்டும் என்று , பழைய பல்லவ மன்னரின் பங்காளிகளில் ஒருவர் தமிழை ஆழமாக கற்றுணர்ந்து, மூன்றாம் நந்திவர்மன் உலா போகையில் , அவன், “கலம்பகம்” பாட, மன்னன் விசாரித்து அவனை அரச சபைக்கு அழைத்துப் பாடச் சொல்ல… ஒத்துக் கொண்ட கட்டளைப்படி இறுதிப் பாடல் சிதையில் மன்னனை படுக்க வைத்து பாடப்பட்டு நந்திவர்மர் தீ பற்றி எரிந்ததாக வரலாறு. தமிழுக்கு நந்திக்கலம்பகம் கிடைத்தது.

அதனால், தமிழன் என்று உரிமை கொண்டாட நாம் போதிதர்மரிடம் போக முடியாது,–
தான் அழிந்தாலும் தமிழில் அற்புதமான ஒரு கலம்பகம் கிடைக்கும் ( நந்திக்கலம்பகம் கிடைத்தது, ) என்று தன்னுயிர் நீத்த மூன்றாம் நந்திவர்மனிடம் தான் போக வேண்டும்….
பல்லவர் யார்…? http://en.wikipedia.org/wiki/Pallava_dynasty#Origins

Series Navigationஅதுஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13