ப்ரதிகள்

Spread the love

ப்ரதிகள் பலநேரம்

அசலைப் ப்ரதிபலிப்பதில்லை.

முன்னம் கூட்டிசைந்த பலவற்றின்

கூட்டுப் தொகுப்பாய் இருக்கின்றன.

அசலின் முத்திரை ப்ரதிகளில்

கருநிற அடையாளமாகின்றன.

பல்வேறு பயணங்கள்

சென்று திரும்பும் ப்ரதிகள்

பெரும்பாலும் அசலை வெருட்டுகின்றன.

குறுக்குக் கோடுகளோ மையெழுத்தோ

முனைசிதைவோ இன்றிச்

சிலவே வீடடைகின்றன.

லட்சத்தில் ஒன்றின் ப்ரதி

அட்சரசுத்தமாய் அச்சுஅசலாய்

அசலின் ப்ரதிபிம்பமாய் அமைவதுபோல

வேறு ஒன்றும் தலைகீழ்ப்ப்ரதியாய்

ஆகிவிடுகின்றது.

பரம்பரை சுழற்சியில்

கூடுமாறும் எப்பிரதிகளையும் அசல்கள்

தன்னுடையதாகவே இனம்காணுகின்றன.

Series Navigation