மகன்

மகனின் வாழ்க்கையில்
மறக்க முடியாச்
சம்பவங்கள் 3

சம்பவம் 1
முப்பது நாட்களுக்குள்
முப்பத்தையாயிரம் வெள்ளி
வீடு வாங்கக் கெடு
வீவக விதித்தது
நெருங்கியது நாள்
உலையானது தலையணை
இடியானது இதயத் துடிப்பு
மகன் வென்றானா?
அன்றி வீழ்ந்தானா?

சம்பவம் 2
இருதயத் துவாரங்களில்
துருவாக அடைப்பாம்
சட்டைப் பை தூரத்தில்
மரணமாம்
அன்றே தேவை
அறுவை சிகிச்சை
மகன் வென்றானா?
அன்றி வீழ்ந்தானா?

சம்பவம் 3
மகனின் மகளுக்குத்
திருமணம்
இரண்டு வாரங்களுக்குள்
இருபதாயிரம் தேவை
வங்கிகள் பிணை கேட்டன
தூண்கள் என்று நம்பியோர்
துரும்பாய் விலகினர்
மகன் வென்றானா?
அன்றி வீழ்ந்தானா?

அத்தனையும்
வென்றான் மகன்
அப்பா தந்த
சொத்துக்களால்

இந்த வாரம்
அப்பாவின் நினைவுநான்
தமிழ் முரசுக்கு மகனின்
மின்னஞ்சல் இப்படி

‘என் அப்பாவின்
நினைவுநாள் செய்தி
இணைப்பில் காண்க
இந்த வாரத்தில்
ஏதாவது ஒரு நாளில்
ஏதாவது ஒரு அளவில்
வெளியிடவும்
இருநூறைத்
தாண்டவேண்டாம்
கட்டணம்
————-

Series Navigationகால இயந்திரம்புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு