மனனம்

Spread the love

எண்ணிப்பார்க்கவியலாத பொழுதுகளில்

உள்ளுக்குள் கரைகிறது

இனம் புரியாதது

சொற்களால் கலையாத கரைகளின் மீதமர்ந்து

வருத்துகிறது நினைவு

படாத தழும்புகளில் வலி நிரப்பி

பாடாய் படுகிறது மனது

சொல்வதற்கு என்ன இருக்கிறது

கழுவ முடியாத கறைகள் பற்றி

எனக்கென்று வாய்கும் அது

நிச்சயமான ஒரு நிகழ்வு தான்

கனிந்து கீழ் வீழ்ந்தாலும்

முளைப்பதில்லை மனித விதை

அதனால்

திளைத்து மகிழ்வதில்லை

மனனித்த வாழ்க்கை.

– சு.மு.அகமது.

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6முகங்கள்