மரணத்தின் நிழல்

மஞ்சுளா 

உயிரின் பேராழத்தில் 

புதைந்து கொண்டிருக்கும் 

ரகசியங்களை 

வாழ்வின் எந்த ஒரு வெம்மையும் 

தீண்ட முடியாது போகிறது 

மரணம் இசை தப்பிய 

ஒரு பாடலை 

இசைக்கும் ஒரு நொடியில் 

உயிர் தனது சிறகுகளை 

விரித்து 

அதன் நிழலை 

ஒரு காதலன் காதலியை 

தழுவுவது போல் 

தழுவிக் கொள்கிறது 

தீராது… தீராது 

அதன் பேராவல் 

அதன் வெற்றிடங்கள் 

பிறப்பின் ரகசியங்களால் 

மீண்டும் மூடப் பட்டு 

வாழ்வின் போதாமைகளோடு 

மீண்டுமொரு பயணத்தில் 

தன்னை இணைத்துக்  கொள்கிறது 

அழிந்தும் அழியாத சுவடுகள் 

எஞ்சிய காலத்தின் 

பக்கங்களோடு 

இன்னும் கூட 

மரணத்தின் நிழலை 

வாசித்தறியாமல் திரிகிறது 

 -மஞ்சுளா 

Series Navigationகாலம் மாறிய போது …ஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..