மலர் தூவிய பாதையில் …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அந்த வெற்றிடத்தை
அவள்
ஆக்கிரமிப்பாளென
அவன் நினைக்கவில்லை
 
காதல் இருகரங்களையும் நீட்டி
அழைத்த போது
அவன் இறுக்கமான மௌனத்தை 
அவள் பின்னர் பாராட்டினாள் 
 
அவள் பேச்சில் பொய்கள்
உண்மை போல் 
அலங்கரித்துக் கொண்டு
புன்னகைக்கும்
 
அவள் பொய்மைக்கு  அவன்
உண்மையின்
மரியாதையையே கொடுத்தான்
 
காதலின் முடிவுரையை
ஒரு நாள் எழுதப்போகும்
காலத்தின் மனம் அறியாமல்
மலர் தூவிய பாதையில்
இவர்கள்
நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் ! 
 
Series Navigation4.ஔவையாரும் முருகக் கடவுளும்