மாற்றம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

எதுவும் நிரந்தரம் இல்லை
என்ற உண்மை ஒரு புதுமலர்
வாடி வதங்குவது போல
பல கோணங்களில்
நம்மை வந்தடைகிறது

நட்பில் முட்கள் பூத்துச் சிரிக்கின்றன
காதல் கைத்துப் போனவன்
பெண்ணைச்
சித்தர் சொற்களால் திட்டுகிறான்

மனித உறவுகளில்
துரோகத்தின் நிறம்
எப்போதும் பூசப்படுகிறது

வீட்டை விற்றபின்
அதன் விலை மிக உயர்ந்து
நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது

நம் திட்டங்களின் பட்டியல் மாறி
நம்மைக் கேலி செய்கிறது

இழப்பு சுமையை அதிகரிப்பதும்
சுமை பலவற்றை இழக்கச் செய்வதும்
தொடர்கின்றன

மாற்றம் மட்டும் எப்போதும்
மனித உறவுகளில்
துரோகத்தின் நிறம்
எப்போதும் பூசப்படுகிறது

வீட்டை விற்றபின்
அதன் விலை மிக உயர்ந்து
நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது

நம் திட்டங்களின் பட்டியல் மாறி
நம்மைக் கேலி செய்கிறது

இழப்பு சுமையை அதிகரிப்பதும்
சுமை பலவற்றை இழக்கச் செய்வதும்
தொடர்கின்றன

மாற்றம் மட்டும் எப்போதும்
சாசுவதம் ஆகிறது !

Series Navigationகம்பன் கழகம் காரைக்குடி கம்பன் திருவிழா, முத்துவிழா அழைப்புஇளையராஜாவின் இசை: பிரேம் ரமேஷ் முன்வைத்தவை