மிதவையும் எறும்பும் – கவிதை

இலக்கியா தேன்மொழி
குளம் ஒன்றில்
மிதக்கும்
கிளை நீங்கிய‌
இலை போலவே நாம்…
எறும்புகள்
நம்மை தேடுவது
குளத்தை கடக்கவென தான்
என்பதே
அறியாதவர்களாய் நாம்…
எறும்புகளுக்கு
நாம் வெறும்
மிதவைகள் தான் என்பதை
ஜீரணிக்க முடியாதவர்களாய் நாம்…
ஒரு மிதவை
தனக்கே தனக்கென‌
ஓர் எறும்பை கேட்பது
எத்தனை பைத்தியக்காரத்தனமோ
அத்தனை பைத்தியக்காரத்தனமானது
ஓர் எறும்பு
ஓர் மிதவையிடம்
‘எனக்கென பிறந்தவள்
நீ ஒருத்திதான்’
என்பதுவும்…
 – இலக்கியா தேன்மொழி
Series Navigationதொடரி – விமர்சனம்திருப்பூர் : ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு