மின்சாரக்கோளாறு

மின்சாரக்கடத்தியாய்
திகழ்வது ஒரு காலம்

மினசாரம் கடந்து
வாழ்வது ஒரு காலம்

வானம்
தெளிவாய் இல்லாத
ஒரு காலமும் உண்டு

அது
எச்சரிக்கையாய்
இருக்கவேண்டிய காலம்

அதை
பதுக்கிவைத்திருந்தால்
ஏமாற்றமில்லை

அது
பதுங்கியிருந்தால்
ஏமாற்றம்தான்

இரவில் இரைதேடும்
எலிகளைப்போலவும்
எலிகளைத்தேடும்
பாம்புகளாகவும்
தலைகாட்டும் தருணங்கள்
அத்துபடிதான்

பெருங்காயப்பெட்டியை
திறந்துவைத்துவிட்டு
ஊதுபத்தியைக் கொளுத்திவிட்டு
காற்றின்மீது கறைபூசமுடியுமா?

அது
வெங்காயத்திற்கும்
கண்ணீருக்குமான பந்தம்

என்னைமீறி எதுவுமில்லை
என்றிருந்ததுதான் தவறு

என்னைப் பலமுறை
வென்றது

வென்றிருந்தால் நான்
இளங்கோ அடிகள்
வெல்லாததால் நான்
வெறும் இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ

Series Navigationபாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்சன்மானம்