மீட்சி

கு.அழகர்சாமி

ஓர் ஊசியால்

கிழிந்த துணிமணிகளைத் தைத்தேன்.

ஓர் ஊசியால்

பிய்ந்த சட்டைப் பித்தான்களைத் தைத்தேன்.

ஓர் ஊசியால்

பிரிவுற்ற உறவுகளைத் தைத்தேன்.

ஓர் ஊசியால்

சிறகுகள் போல் உதிர்ந்த நினைவுகளைத் தைத்தேன்.

ஓர் ஊசியால் என்

உயிரையும் உடலையும் தைக்கப் பார்த்தேன்.

நூல்

அறுந்தது.

ஊசி

செத்தது.

கு. அழகர்சாமி

Series Navigationசி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்….