………..மீண்டும் …………..

எண்ணற்ற நட்சத்திரக்
கோள்களில் தேடி த் தேடி
களைத்துபோய் இருக்கையில்
எங்கோ ஒரு மூலையின் ஓரமாய்
கண்சிமிட்டி அழைக்கிறாய்

இறகுகளின் சுமைகளை
அப்போது தான்
உதிர்த்து பரவலாய்
வைத்திருந்தேன் …
அவைகளை எடுத்து பிணைத்து
கொண்டு இருக்கையில் …
சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது
ஒரு காலைப்பொழுது ….

இரவிற்கான காத்திருத்தல்
தொடங்குகிறது …..

ஷம்மி முத்துவேல்

Series Navigationபுத்தகச் சந்தை 2012 – ஸ்கூப் சுவாரஸ்யங்கள்பாசாங்குப் பசி