மீள்வதா ? மாள்வதா ?

சி. ஜெயபாரதன், கனடா.
 
வாழ்வின் தொடுவானில்
கால் வைத்தவன்,
திரும்பிப் பார்த்தால்
எங்கும்
இருள்மயம் !
மீள்வது சிரமம்.
நீண்ட நாள்
தீரா நோயில், வலியில்
தினம் தினம்
மனம் நொந்து போனவன்
மீளாப் பயணம்.
அணைந்து போகும்
மெழுகு வர்த்தி
மீண்டும் எரியுமோ ?
தொடுவானம்
ஒரு போக்கு 
இறுதிப்
புதைக்குழி !
Series Navigation’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்பாரதிமணியை மறக்க முடியாது