முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

This entry is part 1 of 18 in the series 31 அக்டோபர் 2021

 

லதா ராமகிருஷ்ணன்

 

 

சஃபி என்ற பெயர் நவீன தமிழ் இலக்கிய உலகிற்குப் பரிச்சயமானது.

 

அவரைப் பற்றி எழுத்தாளர் சி.மோகன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

 

//“இலக்கியம், சினிமா, உளவியல் துறைகளில் ஆழ்ந்த ஈடு பாடும் ஞானமும் கொண்டவர். எதிர் உளவியல் குறித்த சிந்தனைகள். தமிழில் அறிமுகமாவதற்கும் அறியப்படுவ தற்கும் காரணமாக இருந்தவர். எழுத்தாளர் கோபிகிருஷ்ண னின் நெருங்கிய நண்பர். அவரோடு இணைந்து ‘ஆத்மன் ஆலோசனை மையம்’ நடத்தியவர். இவருடைய வளமான அறிவைத் தமிழ்ச் சூழல் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்பது இன்றளவும் என் ஆதங்கமாக நீடிக்கிறது.” – சி.மோகன்//

 

சஃபி எனது நண்பரும்கூட. எப்போதோ தான் பார்க்கி றோம் பேசுகிறோம் என்றாலும் பரஸ்பர நட்புணர்வு நீடிக்கி றது. உளவியல் சார்ந்த நூல்கள் சிலவற்றை நான் மொழிபெயர்த் ததற்கு அவரே காரணம்.

 

முல்லா கதைகளை தமிழில் தந்திருக்கிறார் சஃபி. சினிமா, உளவியல் குறித்த வேறு சில குறிப்பிடத்தக்க நூல்களைை யும் எழுதியவர்.

 

தற்சமயம் Govt.Theni Medical College இல் Clinical Psychologist/ Asst.Prof ஆகப் பணியாற்றிவருகிறார்.

 

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மனநலத்துறை வரலாறு பற்றி தொடராக எழுதிவரு கிறார். நாம் கட்டாயம் படிக்க வேண்டும். இந்தத் தொடர் நூல்வடிவமாகவும் வெளிவரும் என்று நம்புகிறேன்.

 

அவற்றிலிருந்து ஒன்று இங்கே பகிரப்பட்டுள்ளது.

 

 

மனநலத் துறை வரலாறு 3(b)

ஜோன் எரிக்கப்பட்டதோடு தொடர்புடைய இன்னொரு செய்தியுண்டு. ஜோன் எரிக்கப்பட்ட ஆண்டிலிருந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் தாண்டி ஹேமர் ஆஃப் விட்சஸ் என்ற நூல் 1486ல் வெளிவந்தது. அதன் மூலநூல் மேலயஸ் மேல்ஃபிகாரம்(Malleus Maleficarum) என்பதாகும்.

 

ஹெய்ன்ரிச் கிரேமர் (Heinrich Kramer) ஜேக்கப் ஸ்பெரங்கர் (Jacob Sprenger) என்ற மதகுருக்களால் எழுதப்பட்டது.சூனியக்காரர்களின் தன்மைகளைக் குறித்தும் சூனியத்தால் பீடிக்கப்பட்டவர்களை அடையாளங் காண்பதற் காகவும், அவர்களிடமிருந்து பாவமன்னிப்பு பெற்று தண்டிப்பதற்காகவும் அந் நூல் எழுதப்பட்டது.

 

அது இரு நூறாண்டுகளுக்கும் மேலாகத் திருச்சபையினருக்குக் கையே டாக இருந்து செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. பல மொழிகளில் பல பதிப்புகள் கண்டுள்ளது. அந்நூலை ஆதாரமாகக் கொண்டு பல மனநலம் பிறழ்ந்தவர்கள், சாத்தானின் சூனியத்துக்கு ஆட்பட்டவர்கள் என்று தீக்கிரையாகியுள்ளனர்.

 

மேற்கின் மனநலத்துறை வரலாற்றைப் படிக்கும்போது, அந்நூல் தவறாமல் குறிப்பிடப்படும். பதினேழாம் நூற்றாண்டின் போதுதான் மனநலக் காப்பகங்கள் உளவியல் கோட்பாடுகள் மெல்ல மெல்லத் தோன்றி மனநலத்துறை தனியாக உருக்கொள்ளத் தொடங்கியது.

 

பாவ மன்னிப்புக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டு பரவலாகத் தீக்கிரையான சம்பவங்கள் இந்தியாவில் இல்லை. ஆனால் பெண்களின் உடலை நெருப்புக்கு பலிகேட்ட கேட்ட தர்ம சாஸ்திரங்கள், மரபுகள் இருந்திருக்கின்றன.

 

உடலைத் தீக்குத் தின்னக் கொடுத்த உடன்கட்டை ஏறுதல் பழக்கம் இருந்திருக் கிறது.

——

Series Navigationஇந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *