முகலாயர்கள் இந்தியர்களல்லர்.

Spread the love

பி எஸ் நரேந்திரன்

“முகலாயர்கள் இந்தியர்களே” என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். முகலாயர்களே தங்களை இந்தியர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. முகலாயர்கள் உஸ்பெஸ்க்கிஸ்தானிலிருந்து வந்த சப்பை மூக்குடைய, மஞ்சள் நிற மங்கோலியர்கள். பாபரிலிருந்து பகதூர்ஷா வரைக்கும் தாங்கள் சக்டாய் பரம்பரையினர் (Chagtai family) எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவர்கள்.
‘முகலாயர்’ என்கிற பெயரே ‘மங்கோலியர்’ என்கிற பெயரின் திரிபு. பாபர், தாய் வழியில் செங்கிஸ்கானின் பரம்பரையிலும், தந்தை வழியில் தைமூரின் பரம்பரையிலும் வந்தவர். செங்கிஸ்கான் இந்தியரா என்ன? தைமூரும் இந்தியரில்லை. இருவருமே மங்கோலியர்கள்.
முகலாய அரசர்களின் நிறவெறி மிகப் பிரசித்தமானது. சொந்தக் குடும்பத்திலேயே வெள்ளை நிறமற்றவனை ஒதுக்கித் தள்ளியவர்கள் அவர்கள்.
எனவே, முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய முஸ்லிம்கள் ‘எவருமே’ உயர்பதவிகள் வகித்ததில்லை. தங்களால் மதமாற்றம் செய்யப்பட்ட கறுப்பு நிற இந்திய முஸ்லிம்கள் திறமையற்றவர்கள், தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளி அவர்களை அவமானப்படுத்தியவர்கள் முகலாயர்கள். அதிகம் போனால் மான்சப்தாராக அல்லது 5000 பேர்கள் கொண்ட படைக்குத் தலைமை தாங்குபவர்களாக மட்டுமே இந்திய முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். வரலாற்று உண்மை இது.
தங்களது நாடானா உஸ்பெக்கிஸ்தானிலிருந்து வந்தவர்கள், பாரசீகத்திலிருந்து வந்தவர்கள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே முகலாய அரசின் உயர்பதவிகள் வழங்கப்பட்டன. ராஜா தோடர்மல், ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் போன்ற ஹிந்து துரோகிகள் தங்களின் நாடுகளை ஆளும் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டது. அதுவும் பெரும் கப்பம் கட்டியபிறகே அது அனுமதிக்கப்பட்டது என்பதினைக் காணவேண்டும். வருடா வருடம் ஹிந்துப் பெண்களையும், யானை, ஒட்ட்கங்கள், படைகள், நகைகள் என முகலாய பாதுஷாக்களுக்குக் கொடுத்து தங்கள் அரசினைக் காத்துக் கொண்ட அடிமைகள் அவர்கள்.
முகலயார்கள் காலத்தில் தென்னிந்தியாவில் ஆட்சி செய்த பாமினி சுல்தான்களில் ஒரே ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பாரசீகத்திலிருந்தும், எத்தியோப்பியாவிலிருந்து வந்து ஆண்டவர்கள். இந்தியனான அந்த ஒருவனும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விஜயநகரத்து பிராமணன். மற்ற நான்கு சுல்தான்களைவிடவும் ஹிந்துக்கள் மீது கொடூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவன். ஹைதராபாத் நிஜாமும் பாரசீகத்திலிருந்து வந்தவர்தான். ஹைதர் அலியும் அவரது மகனான திப்பு சுல்தானும் பாரசீகப் பின்னனி கொண்டவர்களே.
முகலாயர் காலத்து ஆட்சி மொழி பாரசீகம். எல்லோரும் நினைப்பது போல உருது அல்ல. பாரசீகத்திலிருந்து வருகிற வெள்ளை நிறம் கொண்ட எவனையும் முகலாயர்கள் அரவணைத்துக் கொண்டார்கள். அவனுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுத்தார்கள்.
அதற்குச் சிறந்த உதாரணம் மிர் ஜும்லா. இந்த மிர் ஜும்லா பாரசீகத்திலிருந்து தோல் காலணிகளை விற்பதற்காக கோல்கொண்டாவிற்கு வந்தவன். பின்னர் வைர வியாபாரம் தொடங்கிப் பெரும் பணக்காரனாவன். தனது திறமையினால் மெல்ல, மெல்ல முன்னேறி கோல்கொண்டா சுல்தானின் மனதில் இடம்பிடித்துப் பின்னர் அவரால் ஒரு படையணிக்குத் தலைவனாக்கப்பட்டவன்.
கோல்கொண்டாவில் கிடைக்கும் வைரங்களை விடவும் (கோதாவரிப்படுகை) இந்தியக் கோவில்களில் அதிக வைரம் இருப்பதனை அறிந்து கொண்ட மிர் ஜும்லா ஆந்திர, கர்னாடகக் கோவில்களைக் கொள்ளையடித்தான். மிர் ஜும்லா கொள்ளையடிக்காத ஆந்திர, கர்நாடகக் கோவில்கள் எதுவுமேயில்லை. அதன் காரணமாக இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறினான் மிர் ஜும்லா. துரதிருஷ்டவசமாக இந்த வரலாறுகள் நமது கண்ணிலிருந்து மறைக்கப்ப்ட்டுவிட்டன.
தென்னிந்திய சுல்தான்களை அடக்குவதற்காக தக்காணத்தில் வந்து தங்கியிருந்த அவ்ரங்சீப்புடன் பெரும் நெருக்கம் கொண்டிருந்த மிர் ஜும்லாவின் பணம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவ்ரங்சீப்பினால் பாதுஷாவாக ஆகியிருக்கவே முடியாது. தனது படைகளுக்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாக சம்பள பாக்கி வைத்திருந்த நேரத்தில் ஆக்ராவில் அவரது தகப்பனாரான ஷாஜஹான் நோய்வாய்ப்பட்டதாகவும், அதனை உபயோகப்படுத்தி அவரது அண்ணனான தாராஷிகோ பாதுஷாவாகவும் முடிசூட்டிக் கொண்டதாகவும் கேள்விப்பட்டுத் திகைத்து நின்ற அவ்ரங்சீப்பிற்கு மிர் ஜும்லா பணம் கொடுத்து உதவியதாலேயே அவரால் பாதுஷாவாக முடிந்தது. அதற்குப் பதிலாக ஜும்லா சம்பாதித்தது இன்னும் ஏராளம்.
இந்தியாவிலிருக்கும் 90 சதவீத முஸ்லிம்கள் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்களே. இதனை யார் வேண்டுமானுலும் மறுத்துக் கொள்ளட்டும். ஆனால் அதுவே உண்மை. உண்மை என்றும் அழிவதில்லை. ஷாஜஹானின் காலத்தில் கூட இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தைத் தாண்டவில்லை. ஆனால் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்கியே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக் கொண்ட அவ்ரங்சீப்பினால் திணிக்கப்பட்ட ஜிஸியாவும், கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் காரணமாகவும் மதம்மாறிய ஹிந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இது வரலாறு. மொகலாயர்களே எழுதி வைத்த வரலாறு. நான் எழுதிய வரலாறல்ல.
பெரும்பாலான வட இந்திய நவாப்களும், ஜமீன்தார்களும் அவ்ரங்சிப்பின் மிரட்டலால் இஸ்லாமியர்களாக மதம் மாறிய ஹிந்துக்கள்தான். அந்த வரலாறும் துல்லியமாக முகலாயரகளால் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதே மதம்மாறி நவாப்களே பின்னாளில் பாகிஸ்தான் உருவாகக் காரணமானவர்கள். முகமதலி ஜின்னாவின் பின்னனியிலிருந்து இயக்கியவர்கள். பாகிஸ்தானில் தங்களுக்குப் பெரும் மரியாதை இருக்கும் என்று நம்பிக் கொண்டு போன அவரகள் இன்றைக்கு முஹாஜிர்களாகக் கேவலப்பட்டு நிற்கிறார்கள் என்பதுவும் இந்திய முஸ்லிம்கள் அறியாத ஒன்றல்ல.
எனவே, முகலாயர்களுக்கு முட்டுக் கொடுப்பதனை தயவு செய்து நிறுத்துங்கள். உங்கள் தாய்நாட்டின் மீது படையெடுத்து உங்களின் சகோதரிகளைக் கற்பழித்தவர்களையும், குழந்தைகளையும், உங்களின் சகோதரர்களையும் அடிமைகளாகப் பிடித்துச் சென்று வெளிநாட்டில் விற்றவர்களையும், சொத்துக்களைக் கொள்ளையடித்து உங்கள் தேசத்தைச் சுரண்டியவர்களையும் பெருமைப்படுத்தாதீர்கள். அதனைவிடக் கேவலம் வேறொன்றுமில்லை.
உங்கள் மார்க்கம் உயர்ந்ததென்று சொல்லிக் கொள்ளுங்கள். அதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. ஆனால் இது உங்களின் தாய்நாடு. ஊனும், உணவும், இருப்பிடமும், கல்வியும் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கிற உங்களின் தேசம் இது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், சீக்கியன் என அனைவருக்கும் பொதுவான தேசம் இது. தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன். இனிமேலும் கொள்ளையடிக்க வந்தவனை வாழ்த்துவதை நிறுத்துங்கள் என வேண்டுகிறேன்.
படத்தில், பாபரும் தைமூரும். இந்தியர்களைப் போலவா இருக்கிறார்கள் இருவருவரும்?

Series Navigationசெவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்சிதைக்கப்பட்ட இந்திய வரலாறு