முதுமை

Spread the love

போத்து மட்டுமே

சொத்தான முருங்கை

கரைகளின் கைகுலுக்களால்

கோடாகிப்போன ஆறு

வற்றிவிட்டதால்

இனி வாத்துக்கள் வராது

நீண்ட நாடகத்தின்

இறுதிக் காட்சி

இலையுதிர் காலம் மட்டுமே

இனி எதிர்காலம்

காதல்கள் சொன்ன மரம்

இனி விறகு

மறதி இருளின் மையம்

தீப நினைவுகள் மரணம்

நோய்களோடு போராடும்

மாத்திரை வாழ்க்கை

இறந்தகாலம் மட்டுமே பேசும்

பெருங்காய டப்பா

வானவில் மறந்த வானம்

தோகையே மீதியாய் கரும்பு

அம்புகள் சிறைப்பிடித்த வில்

கடலை இழந்த கரை

மனித நிலாவின்

இறுதி அமாவாசை

அமீதாம்மாள்

Series Navigationபோர்ப் படைஞர் நினைவு நாள்மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்: