மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்

Spread the love

மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சன நிகழ்வையும் வெண்கட்டி பத்திரிகை வெளியீட்டையும் இலங்கை கல்விச் சம்மேளனத்தினர் ஒழுங்கமைத்துள்ளனர். இந்நிகழ்வு எதிர்வரும் 25/07/2015 அன்று காலை 9.30 மணிக்கு ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன் வழங்க, திரு. எச்.எச். விக்கிரமசிங்க நூல் அறிமுக உரையை வழங்குவார். மேலும் ஆய்வுரையை கலாநிதி ந. இரவீந்திரன், சூரியகாந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் ஆகியோர் வழங்கவுள்ளனர். அத்தோடு வெண்கட்டி பற்றிய அறிமுகவுரையை பத்திராதிபர் திரு. எம். எஸ். இங்கர்சால் வழங்க நன்றி உரையை சம்மேளனத்தின் ஊவா மாகாண இணைப்பாளர் திரு. எம். மதன் வழங்குவார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கலாசாரக் குழுத்தலைவர் திரு. எஸ். சிறிஸ்கந்தராஜா மற்றும் உபதலைவர் சதிஸ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

Series Navigationதோற்றுப் போகக் கற்றுக் கொள்வோம்‘ரிஷி’யின் கவிதைகள்