மூன்றாமவர்

Spread the love

புத்தி செய்திகள் படிக்கிறது
மனம் அங்கலாயிக்கிறது கேட்டபடி..
எனது வரவேற்பு அறையில்.

நான் இருவரையும் பார்த்தபடி,
தேநீருக்கும் வழியில்லாத விருந்தாளி போல

கண்கள் மூடினால் ஓய்கிறார்கள்
திறந்தால் மறுபடியும் கூச்சல்
ஏதொரு செய்தியுடன் ,விடாமல் !!

தெரிந்தவர்களிடம் கேட்டேன்,சொன்னார்கள் –
இருவரையும் கவனிக்கும் என்னையும்
பார்த்து கொண்டிருப்பவரை கண்டு விட்டால்,
விருந்தே நடத்தி கொள்ளலாமென.

வாயிற் கதவு திறந்துதானிருக்கிறது
எப்போதெனும் வரகூடும் மூன்றாமவர்.

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்கறை