யாதுமாகி….,


ஜெயானந்தன்.
எல்லாமாய் நின்றேன்
எனக்கு பசி கிடையாது
எனக்கு ஆசை கிடையாது.
மோகம் கிடையாது,
காமம் கிடையாது.

யாருமற்ற அநாதையாய்
வானாந்தரத்தில் நின்றேன்.
மீண்டும் மீண்டும்
சூரியனும், சந்திரனும்
காற்றும் மழையும்,
புயழும், பூகம்முமாய்

என்னை தீண்டிச் செல்லும்.

எல்லாமுமாய் நின்றேன்
யாருமற்ற அநாதையாய்  ..!

– ஜெயானந்தன்.

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -25 என்னைப் பற்றிய பாடல் – 19 (Song of Myself) தீயணைப்பாளி நான் .. !இடமாற்றம்