யானை விற்பவன்

                                                   எஸ்.அற்புதராஜ்

யானையோ யானையென்று
யானை விற்பவனொருவன்
தெருவிலே கூவிக்கொண்டுவர
அடுக்ககத்தின்  நான்காம் அடுக்கு
பால்கனியில் நின்று எட்டிப் பார்க்க
கீழே யொருவன் வாசலில்
கையிலொரு கோலுடன்
தலையிலொரு முண்டாசு
முண்டாசின் ஒரு நுனி
முன்தோளின் வலதுபுறம் தொங்க
பாரதியின் மீசையோடொருவன்
யானை மரித்த பாரதியா அது?

யானை எங்கே? நான் கேட்க
இதோ கூட்டி வருகிறேன்.
யானைக்கரன் போனான்.
யானை வாங்குவது
மனசில் உறுதியாயிற்று.
மறுகணம் !
அந்தோ! யானையும் வாங்கவேண்டும்
யானைக்குத் தீவனமும் போடவேண்டும்.
யானையை நிப்பாட்டுவது எங்கே?
குழம்பினேன். ஐயோ என்ன இது.
கண்விழித்துத் திகைத்தேன்.
அடடா ! யானையையும் காணவில்லை
பூனையையும் காணவில்லை.
வீட்டின் ஓலைக் கூரையில்
வானம் தெரிந்தது.

Series Navigationமகாத்மா காந்தியின் மரணம்ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2018