Posted in

யார் இவர்கள்?

This entry is part 9 of 18 in the series 27 டிசம்பர் 2015


அவர்கள் மூளையில்

ஒரு மூலையில்கூட

மனிதம் இல்லை

 

மனிதம் இல்லாத அவர்கள்

மனிதர்கள்போல் இருபார்கள்

 

அவர்கள்

சேணம் கட்டிய குதிரைகள்

அங்குசத்திற்கு வாலாட்டும் யானைகள்

 

மனிதபலி விரும்பும்

ஓநாய்கள்

 

அறம் அறியாத

பதர்கள்

 

இருகால் விலங்குகள்

 

இல்லாத ஒன்றை நினைத்து

ஒவ்வாததையெல்லாம் செய்யும்

உலகக்கேடர்கள்

 

அமைதித்திருடர்கள்

அபாயப்பிறவிகள்

கருத்துக்குருடர்கள்

 

கண்முன்னே வாழும்

காட்டுமிராண்டிகள்

 

இயக்கம்படும்

இயந்திர உயிரிகள்

 

இரக்கம் அறியா

வன்முறைக் காட்டேரிகள்

 

 

 

 

காமத்தால் விளைந்த

உயிர்க்கொல்லிகள்

உயிர்பறிக்கும்

கேவலங்கள்

 

ஆதியும் தெரியாத

அந்தமும் விளங்காத

அறிவிளிகள்

 

எப்படியெல்லாமோ

எழுதியும் சொல்லியும்

எரிகிறது மனசு

 

பரிதவிப்போர் எண்ணி

கரைகிறது மனசு

 

உயிர்பறிப்போர்

இல்லாத

உன்னத உலகம்காண

விழிநீர் சிந்தி

விழைகிறது மனசு

 

இறைவனே!

உன்னை மையமாகவைத்தே

இப்படி வட்டம்போடுகிறார்கள்

 

சதிக்கு எதிரான

சதி என்கிறார்கள்

 

நீ

கண்டுகொள்வதே இல்லை

 

கனவிலாவது வந்து

உயிர்ப்பலி தவிர்த்து

ஓராயிரம் வழிஉண்டென்று

எடுத்துரைக்கவேண்டாமா?

 

கண்டுகொள்ளாத உன்னை

கண்டுகொள்வது என்ன நியாயம்?

 

நீயே

காரணத்தலைவன் என்றால்

தண்டிக்கப்படவும்

கண்டிக்கப்படவும் வேண்டிய

முதல் குற்றவாளி நீ

 

 

 

 

 

 

Series Navigationபூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறதுஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *