வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது

வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு
‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது

வந்தவாசி.டிசம்.19.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ்-க்கு புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து
தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி (எ) கோதண்டராமன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் குரு.பன்னீர்ச்செல்வம், கவிஞர் மு.முருகேஷிற்கு ‘செம்பணிச் சிகரம்’ எனும் விருதினை வழங்கினர். விழாவில், புதுச்சேரி மாநில கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் தி.தியாகராஜன், பேராசிரியர் கலைமாமணி மு.சாயபு மரைக்காயர், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், கவிஞர் பைரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து பல்வேறு சமூகம், இலக்கியம், கல்விப் பணிகளைச்செய்து வரும் கவிஞர் மு.முருகேஷின் சமூக மற்றும் இலக்கியப் பணிகளைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. இதுவரை 15-க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, விமர்சன நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது. தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத் திட்டக்குழுவில் இடம்பெற்று, ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடல் மற்றும் பாடங்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
dssdfdsf

தொடர்புக்கு :
Murugesh Mu <haiku.mumu@gmail.com>

Series Navigationவாய்ப் புண்கள்சாலையோரத்து மாதவன்.