வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!

Spread the love

பூக்களுக்குள்
வாசம் எங்கே
தேடினேன் –
காம்பு மட்டுமே
மீதமாகியது கைகளில்..!

வெற்றிகளின்
ஓரம் வரை சென்றேன்,
பெரும் கிண்ணக்குழிகளாய்
நின்றன…

மழை நாட்களில்
“நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்..,
வாழ்வின் நிலையாமை
புகட்டின…

சாலைகள் தோறும்
கற்களைப் பார்த்தேன்,
மனித இதயங்களின்
மறு வடிவம் யாம் என்றன..

கண்ணாடி தேசத்திற்குள்
நுழைந்தேன்,
என் நிழலைத் தவிர
மற்றெல்லா நிழல்களும்
ஒளிந்து கொண்டன….

உண்மை கொண்டு
உலகைநோக்கினேன்,
பார்வைக்கு முன்னாலுள்ளதெல்லாம்
பூஜ்ஜியமாகின..

பார்வை தாண்டி
நோக்கும் போது
பௌதிகஅதீதம் காட்சிதந்தது..,
வார்த்தைக்குள் அகப்படவில்லை
அது..!!

ஜே.ஜுமானா

Series Navigation“அவர் தங்கமானவர்”மூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்