வால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !

This entry is part 17 of 23 in the series 16 ஜூன் 2013

 

Walt Whitman 

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

  

 

பளீரென்று கதிரவன் காட்சி ! அதில்

குளிர்காய்வ தில்லை நான் !

மேலாக ஒளி ஏற்றுவாய் நீ,

மேற் தளத்திலும், கீழ்த் தளத்திலும்  

பேரழுத்தம் செய்வேன் நான் !

வையகமே ! ஏதோ நீ என்

கையி லிருந்து 

எதிர்பார்ப் பதாய்த்  தெரியுது 

எனக்கு !

பழங் குடுமி வைத்தவனே

விளம்பு வாய்

விரும்புவ தென்ன நீ ?

 

 

ஆணோ, பெண்ணோ

நீவீர் யாரா யினும் நான்

நேசிப்பதாய்ச் சொல்வேன் உம்மை !

ஆயினும் இயலா தென்னால் !

என்னிடம் உள்ள தெல்லாம்

சொன்னாலும்,

உன்னிடம் உள்ளதை எடுத்து

உரைத்தாலும்

என்னால் முடியாது !

என் இராப் பொழுதின் துடிப்பும்

பகற் பொழுதின் நாடியும்

பார்க்கக் கூடும்.

பார் நீ !

உபதேசம் செய்யேன்

உனக்கு நான்!

சிறிய அறக் கொடையும்

புரிவ தில்லை !

தந்தால் நான் என்னையே

தருபவன் தானமாய் !

 

 

ஆண்மை அற்றோனே !

அங்கே நீ

முழங்கால் நடுங்கி

முடங்கினாய் !

திறந்துவை உன் தலைப்பாவை !

ஊக்கப் பொறிகளை நான்

உட்செலுத்தச் செலுத்த

வேண்டும் !

கையை விரிப்பாய் ! உன்

பையைத் திறப்பாய் !

புறக்கணிப்பு செய்யாதே

என்னை !

கட்டாயப் படுத்து வேன் நான் !

களஞ்சி யத்தில்

அள்ளிக் கொடுக்க உபரியாய்

மித மிஞ்சி உள்ளது !

எது என்னிடம் இருந்தாலும்  

அது ஈவதற்கே !

 

+++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (June 11, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .அக்னிப்பிரவேசம்-38
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *