வால்ட் விட்மன் வசனக் கவிதை -33 என்னைப் பற்றிய பாடல் – 26 (Song of Myself) என் ஆன்மா உசிப்பி எழுப்பும்

 


Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

  

மதக்குரு மார்களே ! கேளீர்

தரணி பூராவும்,

எல்லாத்

தருணங் களிலும் நான் உம்மை

வெறுப்பவன் அல்லன் !

எனது நம்பிக்கை

நம்பிக்கை களில் உயர்ந்த தாயும்

தாழ்ந்த தாகவும் உள்ளது !

பூர்வீகம், நவீனம்,

இரண்டுக்கும் இடைப்படும்

எல்லா வற்றையும்

வழிபடுபவன்.

ஐயாயிரம் ஆண்டு கடந்து

நான் பூமியில் பிறப்பேன் என்று

நம்புபவன்.

தெய்வக் குருமார்கள்

மெய்யுரைக்குக் காத்திருப்பேன்.

கடவுளை மதித்து,

பரிதிக்கு வந்தனம் செய்து

வருபவன் !

 

 

ஆலய விளக்கைத் தூண்டும்

அர்ச்சகருக்கு

உதவி செய்வேன் !

நடுத் தெருவில் கூட்டத்துடன்

நடந்து கூத்தாடி,

தலைத் தொப்பியில்

தேன் மதுவைப் பருகுவேன்.

வேதத்தை மதிப்பவன்,

குர்ரானை அலசிப் பார்ப்பவன்,

பைபிள் அறிவுரைகளை

ஏற்பவன்.

சிலுவையில் அறையப் பட்ட

ஏசுப் பெருமானைத்

தெய்வீகம் பெற்றதாய் எண்ணி

ஏற்றுக் கொள்வேன்

நிச்சயமாய்.

மண்டியிட்டு வழிபடுவோர்,

அன்றிப்

புனிதராய்த் துதி பாடுவோர்,

அல்லது

ஆலயப் பீடத்தில் மௌனமாய்

அமர்ந்திருப்போர்

தெய்வங்களுக் கெல்லாம்

மதிப்பளிப்பேன்.

 

 

குழம்பிப் போய்ச் சிக்கலில்

பித்துப் பிடித்து

ஆர்ப்பாட்டம் செய்வேன்;

அல்லது

செத்தவன் போல் கிடப்பேன்

என் ஆன்மா

உசிப்பி எழுப்பும் வரை !

உட்புறத் தையும் வெளிப்புறத் தையும்

மாற்றி மாற்றி நான்

உற்று நோக்கி

சுற்றுச் சூழலுடன் உறவாடுவேன்.

தூரப் பயணத் துக்குப்

போகும் முன்பு ஒருவன்

பொறுப்பைப் பிறனிடம் விட்டு

விலகுவது போல்

உலகச் சுழற்சி விசையி லிருந்து

நழுவிக் கொள்வேன் !

 

+++++++++++++

 

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 74 வெண்ணிலவின் புன்னகை .. !gÖdSe presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE) written & directed by Elangovan