வால்ட் விட்மன் வசனக் கவிதை – 73 (1819-1892) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம்
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(The Base of All Metaphysics)
தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம்
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
தோழர்களே ! கேளுங்கள்
இப்போது:
நினைவில் வைக்கவும்
மனதில் பதியவும்
வாசகம் ஒன்று சொல்வேன்.
தத்துவ அறிவுக் கெல்லாம்
மூலம், முடிவும் போல
மாணவ ருக்கும்,
முடித்த பாட வகுப்பு
முதிய பேராசிரி யருக்கும்.
பூர்வ, புதிய
கிரேக்க, ஜெர்மானிய
ஏற்பாடுகளை
ஆராய்ந்த போது,
ஞானி கன்ட் தெளிவாய்க்
கூறினார்:
ஹெகல், பிளாடோ மொழிந்தார்,
சாக்ரடிஸ்
பிளாடோவுக்கும் மேலாய்
வகுத்துரைத்தார்:
சாக்ரடிஸ் வாக்கு மிஞ்சிய
தத்துவம்
உள்ளதா வென்று
மெய்நெறி தேடப் பட்டு
பதியப் பட்டது;
ஏசுக் கிறித்து கூறிய
வாசகம் எல்லாம்
நீண்ட காலமாய் ஆழ்ந்து
ஆராயப் பட்டன;
காண்கிறேன்
எஞ்சிய விளைவுகளை;
தத்துவ
நெறியெலாம் படிக்கிறேன்,
கிறித்துவ ஆலயங்கள்,
தனியார் குழுக்களும்
ஆராயும் அவற்றை.
சாக்ரடிஸ் வாக்கு மூலத்தில்,
ஏசுவின் வாசகத்தில்
தெய்வீக அம்சம் தெரியும்;
தோழமையில் அவர்
மனிதர் மீது கொண்டுள்ள
கனிவு நேயத்தில்,
தோழனுக்கு தோழி மீதுள்ள
கவர்ச்சியில்,
கணவன், மனைவியாய்
இணையும் நல்ல திருமணத்தில்,
பிறக்கும் பிள்ளைகளில்,
பெற்றோர்களில்,
தெய்வீக அம்சம் காண்கிறேன்.
ஊர் ஒன்று மற்றோர் ஊருக்கு
உபகாரம் செய்வதும்,
நாடு ஒன்று மற்றொன் றுக்கு
நன்மை செய்யப் போவதும்
உன்னதம் என்பேன்.
+++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
S. Jayabarathan [jayabarathans@gmail.com] April 29, 2014
- குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:
- பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்
- களிப்பருளும் “களிப்பே”!
- திரைவிமர்சனம் என்னமோநடக்குது
- திரை விமர்சனம் நீ எங்கே என் அன்பே
- உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை
- மூளிகள்
- ’ரிஷி’யின் கவிதைகள்
- அடையாளம்
- திசையறிவிக்கும் மரம்
- விபத்து
- ஒரு கலைஞனின் கதை – சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் அடுத்து எப்போது திசை மாறப் போகின்றன ?
- தினம் என் பயணங்கள் -15 நமது சுதந்திர நாடு
- வேள்வி
- அது அந்த காலம்..
- அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) -2
- திரை ஓசை வாயை மூடி பேசவும்
- சீன காதல் கதைகள் -2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- சுயத்தைத்தேடி ஒரு சுமூகப்பயணம்.
- நீங்காத நினைவுகள் – 44
- திண்ணையின் இலக்கியத் தடம்- 33
- பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது
- நிவிக்குட்டிக்கான கவிதைகள்
- தொடுவானம். 14. பதினைந்து வயதினிலே
- பசிமறந்து போயிருப்போம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 73 (1819-1892) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம்
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா
- கம்மங்கதிரின் வாசத்தோடு – குமாரகேசனின் ” வண்டிப்பாதை ” நாவல்
- வாழ்க்கை ஒரு வானவில் – 1 (ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் புதிய தொடர்)