வாழ்க்கை எதார்த்தம்

ஒரு முறை தோல்வியின்
வலி உயிரின் வேரை
பிடுங்கிவிட்டு திரும்பும்
போது தோல்வியோடு
வலியும் மனப்பாடமாகி
போவதில் ஆச்சரியமில்லை

இரவை தோற்று பகல்
அழிவதில்

மழை தோற்று வெயில்
அழிவதில்

இரைச்சல் தோற்று மௌனம்
அழிவதில்

கனவுகள் தோற்று வாழ்க்கை
அழிவதில்

பிணி தோற்று உடல்
அழிவதில்

முதுமை தோற்று அழகு
அழிவதில்

துன்பம் தோற்று இன்பம்
அழிவதில்

உலகமயமாக்கல் தோற்று விவசாயம்
அழிவதில்

அரசியல் தோற்று மக்கள்ஆட்சி
அழிவதில்..

வறுமை தோற்று ஆசை
அழிவதில்

ஆணவம் தோற்று புகழ்
அழிவதில்

வறட்சி தோற்று பசுமை
அழிவதில்

ஏதோ ஒன்று அழிந்து ஆக்கம்
பெறுகிற இயற்கை நியதில்
கிடைக்க வேண்டும் என்பது
தோற்று கிடைப்பதை ஏற்பதில்
வாழ்கை எதார்தமாகிறது.

இப்படிக்கு
ராசை நேத்திரன்

Series Navigationமகிழ்ச்சியைத் தேடி…மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்