வாழ்வை தேடும் கண்துளிகள்

ப.தனஞ்ஜெயன்.

உலகம் முழுவதும் நிரம்பியுள்ள உயிர் மூச்சின் கலவரத்தில்
தனக்கான காற்றை நிரப்புகிறது நுரையீரல்
வாழ்கை சமுத்திரத்தில் பாய்மரங்களாக மிதக்கின்றன மனித உயிர்கள்
இறந்தகால சேமித்தலில் பிறக்கிறது நாட்கள்
நாட்காட்டிகள் கிழித்துகொண்டும்
கடிகார முட்கள் நாட்களின் இதயங்களில் அடித்து அழைக்கிறது
நுண்நொடிகளை.

சமுத்திரம் அருகே கிடக்கும் கரும்பாறை ஒன்றில் வான்கோக் கொகைனும்
பிக்காசோவும் வண்ணம்தீட்டிய அழகை ரசிக்க மறந்து மிதக்கிறது கண்கள்.

டாவின்சி மலை உச்சியின் குகையில்
கடல் உயிரின் படிமங்களில் கடலை காண்பித்தான்.

நாம் காணும் கடலுக்கடியில் எத்தனை மலைகள்
எதிர்கால மர்மங்கள்
மனிதனாக முயற்சிக்கும் சமுத்திரத்தில் எண்ணங்கள் நட்சதிரங்களாய்
இருமை கூறுகளின் ஒளியை பிரசவிக்கிறது.

நான் சமுத்திரம் அருகே கரும்பாறை ஒன்றின் மேல் கால் நனைய அமர்ந்துவிட்டு எழுகிறேன்.

கால் பற்றிய மணலை உதரி நடக்கும் பாதையில் தடங்கள் பின்தொடர்ந்தது
காற்றின் தீவிரத்தில் மணலாய் மாறியது தடங்கள்.

திரும்பிய என் பார்வை பாறை ஒன்றின் மேல் கடலை எழுதும் முயற்ச்சிக்கும் அலையை பார்த்து
வெறித்தது கண்கள்
அதில் வாழ்வையும் சொற்களையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Series Navigationவன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி