விடியாதா 

 

 
யான் சம்பூர் தமிழ்க்கிறுக்கன்
————————
வலிகளோடு வாழுகிறோம்  
விழிகள் பயந்திருக்கிறது விடியுமா என்று 
வீதிகள் தோறும்  கறுப்புச்சப்பாத்து 
கால்கள் நடந்துகொண்டிருக்கிறது 
 
மனம் கொடும்பாலையாக வெந்து 
வெடித்துக்கிடக்கிறது வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட என் கடந்த 
காலத்தின் பெருஞ்சாட்சி இன்னமும் பசித்துத்தான் காத்திருக்கிறது 
 
கொடூரம் அரங்கேறிய விடியலின் 
ஆதிரகசியங்கள் 
உரத்துச்சொல்லப்படுவதை காட்டிலும் காதோடு கதைபேசுவதுதான் நல்லது 
 
நானும் பார்க்கிறேன் அத்தி மரந்தானே ஆவினத்தின் சேர்மானம் அது போல இது 
விதியென்று நொந்துகொண்டே 
எனக்கான காலங்கள் மட்டும் 
கடுகதியாய் நகர்ந்து போகிறது 
 
இரவுப்பூக்கள் ஒவ்வொரு இரவும் பூக்கும்  இருந்தாலும் இப்பிறப்பில் எங்களுக்கான  
இருள் விடியாது  ஏனென்றால் நாங்கள் காரமேற்றும் மகரவாழையின் கொழுந்திலை என்ற நினைப்பு  அவர்களுக்கு 
 
விளைய வைக்கத்தெரிந்தவர்கள் 
விதைநெல்லே அறியாதவனிடம் வீழ்ந்ததுபோல எங்களின் இறுதி 
விடியலின் நம்பிக்கையும் அவர்களின் காலடியில் காய்ந்து கருகிப்போனது .
 
யான் சம்பூர் தமிழ்க்கிறுக்கன் .
Series Navigationபகல் கனவு சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்