வினா ….

Spread the love

இருளை உள்ளடக்கியே
பரவிக்கொண்டிருக்கின்றன
வெளிச்சக் கீற்றுக்கள்

எங்கும் துளை போட இயலாமல்
காற்றுவெளியில் இறுகி
கோளங்களாய் உருண்டு
வீசப்படாத எரிபந்துகளாய்
அந்தக் கோள்கள்…

வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ
திசை எங்கிலும் விரவிக் கொண்டே
தனித்தொரு பாதையமைத்து
எதிலும் படாமல் விலகியே செல்லும்

என்றும் விடை தெரிவதே இல்லை
சில கேள்விகளுக்கு மட்டும்

ஷம்மி முத்துவேல்

Series Navigationசனி மூலையில் தான் நானும்இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்