விலாசம்

Spread the love

 

விமலன்
 
 
அவர் எனது உறவுக்காராகவே 
தென் படுகிறார் அன்றாடங்களின் மலர்தலில்,,,!
நடைபயிற்சி சென்ற இருள் விலகா அதிகாலையில் பார்க்கிறேன் அவரை,,,!
எனக்கு முன்னே முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்த அவரை சடுதி காட்டிக்கடக்கிறேன்.
அவர் மெதுவாய் நடந்தாரா
இல்லை நான் வேகம் கூட்டிச்சென்றேனா தெரியவில்லை.
அப்படியெல்லாம் முந்திச்செல்ல விளையாட்டு மைதானத்தின் விதிகளோ இல்லை அதற்கென வகுக்கப்பட்டிருந்த கோட்பாடுகளே இல்லை.
மண்ணும் தூசியும்,புழுதியும் சற்று அழுக்குமான சாலையில் ஊர்ந்த கனரகமும் மிதரகமுமான வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் உடன் கை கோர்த்துச்சென்று கொண்டிருந்த பாதசாரிகளுமாய் காட்சிகொண்டும் சுகந்தப்பட்டுமாய் காட்சி கொண்டிருந்தது அவ்வேளை!
மேகங்கள் நகர பறவைகள் பறக்க ஜீவராசிகள் ஓட எவ்வித போக்குவரத்து சமிக்ஞையுமற்று
சென்றுகொண்டிருந்த நான்
எல்லை தொட்டு திரும்புகையில் எதிர்பட்ட அவரை ஸ்நேகம் கொண்டு பார்க்க்கிறேன்.
தென்படுகிற மனித சம்பாத்தியத்தை எளிதில் எப்படி விடுவது.,,,?
பரஸ்பரங்களில் சிரிக்கிறோம். பேசுகிறோம்,கைகுலுக்கிக்
கொள்கிறோம்.
குசலங்களிலும் நட்பிலும் 
விலாச விவரிப்பின் முடிச்சிலுமாய் அவர் என் உறவுக்காரர் என 
தென் பட்டு விரிகிறார்.
கோர்த்திருந்த கையை விடுவித்து எடுக்காது நகர்கிறோம் மெது நடை காட்டி ,,,!
எங்களின் எதிர் திசை காட்டி ஏழ்மை போர்த்திய முகத்துடன் வந்து கொண்டிருந்த என் நண்பனுக்கு வணக்கம் சொல்லி சிரித்த போது என்னில் கோர்த்திருந்த கை விடுவித்து வேகம் காட்டி நகர்கிறார்.
என் உறவினர்,,,!
 
 
                                    விமலன்,,,
Series Navigationபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022)கவிதை