விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகன்

அன்புள்ள கோபால்சாமி
சென்ற ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகனை தேர்வு செய்திருக்கிறோம்.
உதிரிகளின் வாழ்நிலையை இலக்கியத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதற்காகவும்,ஒரு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்திருப்பதற்
காகவும்,வட்டாரச் சொல்லகராதி,வரலாற்றுக் கண்ணோட்டம்,இலக்கிய முன்னோடிகள் குறித்த மறுவாசிப்பு,கல்விப்புலத்தில் காத்திரமான இலக்கிய உரையாடல்களை முன்னெடுத்தது என இலக்கியச் செயல்பாடுகளை விரிவுபடுத்
தியதிலும் அவர் பங்களிப்பு சிறப்பானது.
விவாதத்தில் வந்த மற்ற படைப்பாளிகள்:சி.மோகன்,கோணங்கி,யூமா வாசுகி,
ஆ.மாதவன்.
இத்துடன் பெருமாள்முருகனின் படைப்பு விவரங்கள் உள்ளன.
வெளி ரங்கராஜன்
26.12.2013
perumalmurugan
பெருமாள் முருகனின் ஏற்புக் கடிதம்:

அன்பிற்குரிய நண்பருக்கு,

வணக்கம். இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். நான் மட்டுமல்ல, தமிழ்ச் சூழல் மிகவும் மதிப்புடையதாகக் கருதுவது விளக்கு விருதை. அதன் நடுவர் குழுவில் மூன்றாண்டுகள் இருந்தேன் என்பதையே மிகவும் பெருமையாகக் கருதியிருந்தேன். இப்போது அவ்விருதாளர் பட்டியலில் என் பெயரும் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கும் நான் மதிக்கும் கவிஞர் வைத்தீஸ்வரன், அம்ஷன் குமார் ஆகியோருக்கும் என் நன்றிகள். விளக்கு அமைப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.

என்னைப் பற்றிய சிறுவிவரம்:

15-10-1966இல் பிறந்தேன். திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளி எனது ஊர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறேன்.

எனது படைப்புகள்:

நாவல்கள்:

1. ஏறுவெயில்

2.நிழல்முற்றம் ( ஆங்கிலத்தில் CURRENT SHOW  என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் வழியாக போலிஷ் மொழியிலும் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

3. கூள மாதாரி ( ஆங்கிலத்தி SEASONS OF THE PALM என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. இது kriyama பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற நாவல்.)

4. கங்கணம்

5. மாதொருபாகன் (இவ்வாண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ONE PART WOMAN என்னும் தலைப்பில் பெங்குவின் வெளியீடாக வந்துள்ளது.)

6. ஆளண்டாப் பட்சி ( கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது பெற்றது)

7. பூக்குழி (இவ்வாண்டு வெளிவர உள்ள நாவல்.)

சிறுகதைகள்

1. திருச்செங்கோடு

2. நீர் விளையாட்டு (கதா விருது பெற்ற நீர் விளையாட்டு என்னும் கதை இத்தொகுதியில் உள்ளது.)

3. பீக்கதைகள்

4. வேப்பெண்ணெய்க் கலயம்

கவிதைகள்

1. நிகழ் உறவு

2.கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்

3. நீர் மிதக்கும் கண்கள்

4.வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்


அகராதி

 1. கொங்கு வட்டாரச் சொல்லகராதி 2000

கட்டுரைகள்

 1. ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை-2000
 2. துயரமும் துயர நிமித்தமும்-2004
 3. கரித்தாள் தெரியவில்லையா தம்பி-2007
 4. பதிப்புகள் மறுபதிப்புகள்-2011
 5. கெட்ட வார்த்தை பேசுவோம்-2011
 6. வான்குருவியின் கூடு – 2012
 7. நிழல்முற்றத்து நினைவுகள் – 2012

பதிப்புகள்

 1. கொங்குநாடு (தி.அ.முத்துசாமிக் கோனார்)
 2. பறவைகளும் வேடந்தாங்கலும் (மா.கிருஷ்ணன்)
 3. கு.ப.ரா. சிறுகதைகள்

தொகுப்பாசிரியர்

 1. பிரம்மாண்டமும் ஒச்சமும்
 2. உடைந்த மனோரதங்கள்
 3. சித்தன் போக்கு (பிரபஞ்சன்)
 4. கொங்குச் சிறுகதைகள்
 5. தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்
 6. உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்
 7. தீட்டுத்துணி (அறிஞர் அண்ணா )

விருதுகள்

 1. கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது 2013
 2. கதா விருது 2000
 3. கனடா இலக்கியத் தோட்ட விருது – அபுனைவுப் பிரிவு 2011
 4. சிகேகே அறக்கட்டளை விருது
 5. அமுதன் அடிகள் விருது
 6. மணல் வீடு விருது
 7. களம் விருது
 8. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
 9. லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது
 10. தேவமகள் விருது
வேறு விவரம் ஏதும் தேவையென்றால் தெரிவிக்கவும்.

அன்புடன்,–

பெருமாள்முருகன்,
www.perumalmurugan.comSeries Navigation