வீட்டில் இருப்போம்

Spread the love

மரத்தின் வாழ்க்கை

மகத்தானது

ஊன்றிய இடமே உலகம்

உலகம் அங்கு ஒடுங்கும்

கொடியையும் தாங்கும்

இடியையும் தாங்கும்

மண்ணும் மழையும்

காற்றும் கதிரவனும்

கைகட்டி நிற்கும்

அளந்து பெறாது

அளந்து தராது

கேட்டுப் பெறாது

கேட்டுத் தராது

விடியலை இருளை

தளிரால் வாழ்த்தும்

சருகால் வணங்கும்

பறவைகள் பூச்சிகள்

தான் பெற்ற பிள்ளைகள்

கனிகள் தந்து

குலத்தினைக் காக்கும்

நிழல் தரும் மழை தரும்

மனிதனுக்காக

உயிரையே தரும்

மரம் மனிதனுக்குச்

சொல்கிறது

‘என்னைப் போல்

இடப்பெயர்ச்சி மற

எல்லாம் சுகம்’

இடப்பெயர்ச்சி மறப்போம்

வீட்டில் இருப்போம்

அமீதாம்மாள்

Series Navigationநூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘எனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதா