வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்

முனைவா் சி. இரகு, திருச்சி.

வீரர்களே வீரர்களே இந்தியாவின் காவலர்களே

உற்றார் உறவினர்களைத் துறந்தே

நாட்டைக் காத்தீர்களே…!

எங்கள் உயிர்க்காத்த தோழர்களே

உங்களை இழந்தோம் – நாங்களோ

கண்ணீ ர்க் கடலில் மிதக்கின்றோம்.

வீரத் திருமகன்களே இந்தியப் புதல்வர்களே

காலச்சூழ்நிலையில் சிக்கிக்கொண்டீர்களோ…?

வானூர்தியே வசப்படுத்திய வல்லமையோரே – அந்த

ஊர்தியே காலனாய் மாறிவிட்டதோ…?

எங்கள் நெஞ்சமோ பரிதவிக்கின்றதே.

முப்படையின் முதல் தலைமை தளபதியே

நாட்டின் பாதுகாவலரே பிவின் ராவத்தே

எல்லையைக் காத்த புண்ணியவானே

வீரர்களோடு வீரமரணம் அடைந்தீரோ…?

சுதந்திர இந்தியாவின்

சரித்திரம் படைத்த சுபாஷ்களே

இராணுவ வீரர்களே வெற்றித்திருமகன்களே

எங்கள் உறக்கம் காக்க

உங்கள் உறக்கம் துறந்தவர்களே

நிரந்தர நித்திரை அடையச் சென்றீர்களோ…?

எங்கள் உள்ளமோ குமுறுதே

நெஞ்சமோ பதறுதே கண்களோ கலங்குதே

உடலோ நடுங்குதே குருதியோ கொதிக்குதே

நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்ததால்…!

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]ஞானம்