வெற்றுக் காகிதம் !

Spread the love

 

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 

 

வெற்றுக் காகிதம்

மௌனமாக 

இருப்பதாகவே தோன்றும் 

 

ஆனால் அது மனிதனை

எழுத்து வடிவத்தில்

மகிழ்விக்கவோ

துன்பம் தரவோ காத்திருக்கிறது 

 

ஒரு வெற்றுக் காகிதம்

வேலைக்கான உத்தரவாக மாறி

ஓர் இளைஞனைத்

துள்ளித் குதிக்க வைக்கும்

 

ஒன்று ஒருவனைச் 

சிறையில் தள்ளும்

 

மற்றொன்று   ஓர் ஏழை நோயாளியைப்

பதற வைக்கும்

 

நேற்று படித்த நல்ல கவிதை ஒன்றைத்

தாங்கி இருந்ததும்

வெற்றுக் காகிதமாக இருந்ததுதானே ! 

 

வெற்றுக் காகிதத்தின் மௌனம்

ஒரு தவம்

அது வரமும் தரும்

தண்டனையும் தரும் … 

 

Series Navigation  (அல்லக்)கைபேசி !ஒரு கதை ஒரு கருத்து  மா. அரங்கநாதனின் பூசலார்