வேரா விதையா

சு. இராமகோபால்

வெளியே காட்டிக்கொள்ள முடியாவிட்டாலும்
ஆடிக்காற்றில் படபடக்கும் பட்டமாகத்தான்
வாழ்க்கை இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது
எப்போது ஒருநாள் இப்படியென்றால் பொறுத்துக்கொள்ளலாம்
ஒவ்வொரு விநாடியும் இப்படியே என்றால் எப்படி
அப்படித்தான்
உன்னை ஒருமுறையாவது ஊர்ந்து பார்க்க
வேண்டுமென்ற வேட்கை தடுக்கமுடியாமல் உண்டாகிவிடுகிறது
அப்போதெல்லாம்
எட்டி உதைத்து கத்திக்கொண்டிருந்த நீயும் சோர்ந்து
அஞ்சாமல் என்னிடம் தயங்காமல் தஞ்சமாகிவிடுகிறாய்
முன்னொரு நாள்
திசை தெரியாமல் திரிந்துகொண்டிருந்த பிரபஞ்சம்
உன்னிடம்தான் புகுந்தது தஞ்சமென்று எரிமலையாய்(ப்)
புதிதாக எழுச்சிபெற்று–
அலைத்தபுகை மண்டலங்கள் நாவலையில் மாட்டியதும்
உயிர்ப்பித்த வடிவிறைகள் வகுத்ததுன் வாய்ப்பாடு
அழுகிய கடல் அடியில் முழுகி வடிவிழந்த ரம்பைகள்
சிலிர்த்தெழுந்து அண்டத்தில் ஏழ்வர்ண யாழ் சுமந்து
பிம்பத்தை முத்தமிட
இடைவளைந்த தத்ரூப சித்திரங்கள் நீவார்த்த சாகசங்கள்
வரம்பு மீறும் நடவடிக்கை வாசலிலே நிறுத்திவிடும்
வாகன வாரியங்கள் உன் நித்திக்கும் வரிவிதிகள்

அசிங்க வைகுண்டம் விட்டிறங்கி
உடைதுறந்து என்முன்னர் நிற்கின்றாய் அகில விழிவிரித்து
மேன் மணல்கூடக் கீறமறந்துவிட்ட ஏர்முனையாய்
என் கண்ணுனிகள்

Series Navigationஅய்யிரூட்டம்மாமரணத்தின் வாசலில்