வேறு ஆகமம்

Spread the love

சேயோன் யாழ்வேந்தன்

 

அடிவாங்கியே

புனிதராகிவிட்டீர்

அடித்தவனை

பாவியாக்கி!

ஒரு கன்னத்தில்

அறைந்தவனை

மேலும் பாவியாக்க

யாம் விரும்பவில்லை

பிதாவே!

 

வண்டி இழுத்து வந்த

குதிரை

வாய்ப்பூட்டோடு

வாசலிலே நிற்கிறது

பாவிகளை

உம்மிடம்

சுமந்து வரும்

பாரம் அழுத்துகிறது

பரம பிதாவே

உண்மையிலேயே

வருத்தப்பட்டு

பாரம் சுமப்பவர்களுக்கு

எப்போது

இளைப்பாறுதல் தரப்போகிறீர்?

 

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

 

Series Navigationநகைகள் அணிவதற்கல்ல.தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு