ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பதில் கிடையாது ! நீரூற்றின் ஓசைப் பண்ணிசை வாசல் முற்றத்தில் தனித் தொலிக்கும்; பளிங்கு மேல் விழும் நீர்போல் என் இதயம் வீழ்ந்திடும் தவித்து; காதல் பெரு மூச்சு சாதல் நோக்கிப் போகும் ! மரணம் முன்தூண்டும் நமது காதல் வெற்றி பெற ! ஒளிவீசும் விழிகள் வெளிப்படும் எப்போதும் ! நிச்சயம் தேடி வருவாயா ? […]
ராகவன் உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தான். “ ஜனனி, வாக்கிங் போயிட்டு வரேன்.” கை வேலையை போட்டு விட்டு ஜனனி ஓடி வந்தாள். எதிரில் நின்று கொண்டாள். ஜனனி என்றைக்கும் போலவே புதுமலர் போல இருந்தாள். அழகாக உடுத்தியிருந்தாள். தலையைப் படிய வாரி இருந்தாள். வில்லாக வளைந்திருந்த புருவங்களுக்கு மேலே அளவான சைசில் சிகப்பு பொட்டு வைத்திருந்தாள். ராகவன் அவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். “ பராசக்தி, பராசக்தி “ அவள் வாய் மூன்று முறை உச்சரித்தது. […]
(முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.) ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நானும் போயிருந்தேன். நம்ம நாட்டில் அதுவும் நான் வாழும் ஊரில் நடக்கிறது. எப்படிப் போகாமல் இருப்பது? அது மட்டும் அல்ல. முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நான் ஒரு ஊழியனாக இருந்து பணிபுரிந்துள்ளேன். தவத்திரு தனிநாயகம் அடிகளார் தலைவராக இருந்த மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வுத்துறையில் நான் ஒரு மாணவனாக இருந்தேன். […]
டேவிட் ஜெ. பிரவீன் இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது உணர்வு சார்ந்த தளத்திலிருந்து மனித இருத்தலுக்கு அத்தியாவிசிய தேவை என்கிற தளத்திற்கு போய்கொண்டிருக்கிறது. மனித வாழ்விற்கு அடிப்படைகளான நிலம், நீர், காற்று ஆகியவைகள் இன்று பெரும் சீரழிவிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது. இப்புவியில் மனித இருத்தலை மேன்மைபடுத்துவது என்கிற பெயரில் மனித இனத்தோடு சேர்த்து மற்ற விலங்கினங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விசயங்கள் சிறிது சிறிதாக தகர்ப்படுகின்றன. தகர்க்கப்படும் இந்த பட்டியலில் விடுபட்ட மிக முக்கியமான ஒன்று உணவு. ‘இதையாவது […]
வைகை அனிஷ் தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகளை கோயில் விழாக்களில் கொண்டாடுவதும் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டு கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகிறது. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிவமாக அமைந்துள்ளன. சமயஉணர்வு, அச்சஉணர்வு, பேயோட்டம், வலிமை, பொழுதுபோக்கு என்று பலவிதமாகக் கலைகளின் நோக்கத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஊஞ்சலாட்டம், புலிவேடம், கோமாளி ஆட்டம், காவடியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பச்சை குத்தும் கலை,கும்மியாட்டம், […]
தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால் தான் எழுந்து உள்ளே போவான். இப்போது திடீரென்று காட்டுக் கொல்லைகளில் யானைக் கூட்டம் திரிகிறது என்று பரவியிருக்கிற பீதிக்காக படுக்கையை மாற்றச் சொன்னால் அவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது. முதலில் அந்த யோசனையைச் சொன்னது வள்ளி அல்ல. கட்டிய கணவன் எந்த யோசனையைக் கேட்டுக் கொள்வான், கேட்க மாட்டான் என்று திருமணமான ஒரே வருஷத்தில் புரிந்து […]
ஜெயக்குமார் கடந்த இரு தினங்களாக பாக்தாதிற்கு அலுவலக வேலையாகச் சென்றிருந்தேன். வழக்கமான பாக்தாத்தான் என்றாலும் இப்போது போலிஸ் மற்றும் மிலிட்டரியின் கெடுபிடிகள் அதிகமாயிருக்கிறது எப்போதும் ஏதேனும் ஒரு மிலிட்டரி வாகனம் சைரனுடன் வழிவிடச்சொல்லி கேட்டுக்கொண்டே செல்கிறது. வாகனங்கள் பெருத்துவிட்டதால் சாலையெங்கும் வாகனங்கள் மட்டுமே. 2 கிலோமீட்டர்களைக் கடக்க 45 நிமிடங்களாகிறது, காலைவேலைகளில். மதியம் 30 நிமிடங்கள். அவ்வளவுதான் வித்தியாசம். சீனப்பொருட்கள் கிட்டத்தட்ட மலைபோல குவிந்திருக்கின்றன. பல் விளக்கும் பிரஷ்ஷிலிருந்து எல் ஈ டி டிவிக்கள் வரை அவர்களின் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ http://www.space.com/10357-water-moon.html#ooid=0xYXd4cDoFnQ3VPwpDZ0WoT9A4Xmf8ZB http://www.space.com/10039-water-moon-hydrogen-oxygen-energy.html#ooid=JrMXV4cDrahMCGJgqFYxfPJR0v-hbI_6 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BlrVA9i7AjM https://www.youtube.com/watch?feature=player_embedded&v=T-mHE6Tjs6o https://www.youtube.com/watch?v=ehyHRjR5844&list=PLAD5ED8FF53A4FC5A&feature=player_embedded https://www.youtube.com/watch?feature=player_embedded&v=DGk43fn51x4 ++++++++++ நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி வாயு மிகுதியாய் இருப்பதை நாசா விண்ணுளவி தெரிவிக்கும் ! குடிநீர்க் குவளைகளைக் கொண்டு செல்வது விண்கப்பலில் கோடான கோடிச் செலவு ! மறைந்து நீர்ப்பனிச் சரிவுகள் பல யுகமாய் உறைந்து கிடக்கும் பாறையாய் பரிதி ஒளி படாமல் ! எரிசக்தி உண்டாக்கும் அரிய ஹைடிரஜன் வாயு சோதனை மோதலில் வெளியேறும் ! செவ்வாய்க் […]
வருடம் பிறந்து விட்டது என்று புது டைரியை பிரித்து வைத்து என்ன எழுதலாம் என்று பேனாவை உருட்டிக்கொண்டிருந்தேன். அந்த பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது. பத்தாயிரம் ஒட்டகங்கள் ஊர்வலம் போகலாம். அவ்வளவுக்கு பாழ் மணல் வெளி. சூரியன் தன் வெயிலை எல்லாம் சிவப்பாய் மஞ்சளாய் வெள்ளையாய் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான். எதை எழுத? உச்சு கொட்டினால் உமர் கய்யாம் வருகின்றான். செல்ஃபோன் ஒலி எச்சில்களில் கூட ந.முத்துக்குமார் இனிமை வழிய இளமை பிழிந்தார். பிள்ளையார் சுழியாய் “உ”வையும் கோடுகளையும் […]
Dear Thinnai Readers Another English book of mine – translation by me of my Tamil MadhdhaaLangaL – telecast by Director Mr. K. Balachander, on RAJ TV several years ago – has been published and released by Cyberwit.net Publishers of Allahabad, recently. It is a hilarious comedy about a good youth sandwiched between his possessive mother […]