ஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ்

This entry is part 20 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

 

தமிழ் நவீன இலக்கியத்தின் எழுத்தாளர்களில் முக்கியமானவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான நாஞ்சில் நாடன் அண்மையில் ’சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் 14 வகைச் சிற்றிலக்கியங்களை மிகுந்த தேடலுக்குப்பின் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார்.

அந்நூலில் ‘பிள்ளைத்தமிழ்’ என்னும் வகையில் பல பிள்ளைத்தமிழ் நூல்களை அவர் காட்டுகிறர். அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் எனும் நூலாகும். நாஞ்சிலின் நூலைப்படிக்க இயலாதவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத் தமிழ் பற்றி அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்

மொத்தம் 72 பெண்பாற்பிள்ளைத்தமிழ் நூல்களை அவர் பட்டியலிடுகிறார். அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத் தமிழாகும். இதை சவ்வாதுப்புலவர் எழுதி உள்ளார்.

பிற பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களில் இல்லாத காம நோன்புப்பருவம் என்ற ஒன்று இந்நூலில் காணப்படுகிறது. இந்நூல் காப்பு, அவையடக்கம், பழிச்சினர்ப்பரவல் எனத்தொடங்கிப் பிறகு வழக்கமான 11 பருவங்களைக் கொண்டுள்ளது. பழிச்சினர்ப் பரவல் என்பதற்குத் துதிக்கு உரியவர் என்பது பொருளாகும். இந்நூல் மொத்தம் 118 பாடல்களை உடையதாகும்.

அவையடக்கப் பகுதியில் ஒரு பாடல்:

” செம்பொற் கலந்தனில் முல்லைமென் முகையில்

சிறந்தமெல் அடிசில் இமையோர்

தெள்ளமுது எனும்சுவை உடைக்கருணை முக்கனித்

திரள்பெய்த பால் அளாவிச்

சம்பத்து அடைந்து அருந்திய புனிதர் புளி இலைத்

தளிகையில் பவளம் அவைபோல்

தழைநிறத்து உப்பிலிப் புற்கை மோர்பெய்து உண்ட

தன்மையை நிகர்க்கும்; ஒண்பொன்

கும்பத்தினில் புடைத்து எழுமுலைக் கோமளக்

.  கோதை சூடிக் கொடுத்தாள்

கோதற்ற குரவர் முதலிய புனிதர் செஞ்சொல்

உட்கொண்ட தன்செவிகள் அதனால்

இம்பர்க்கு அமைந்த இருசெவியினும் சிறிது சென்று

ஏறாத வெளிறு உடைத்தாய்

ஏழையேன் அறிவுற்று உரைத்த புன்சொல் தனையும்

இனிது உவந்து உட்கொண்டதே “

”செம்பொன்னாலான பாத்திரத்தில், முல்லையின் மெல்லிய மொட்டுப்போல் சிறந்த மெல்லிய அரிசியில் சமைத்த உணவை, தேவர்களின் அமுதம் போல் சுவை உடையதாக, பொரிக்கறி, முக்கனித் திரள் பெய்து பால் அளாவி செல்வம் போல் உண்டனர் புனிதர். அவர்க்கு புளி இலைத் தளிகையும் பவள நிறத்தும் பசுமை நிறத்தும் ஆன சோறும் உப்பில்லாத நீர் நிரம்பவும் பெய்த, மோர் ஊற்றிய கூழ் போல் படைப்பதை ஒத்தது எனது நூல். ஒண்பொன் கும்பம் போல் புடைத்து எழுந்த முலைகளை உடைய கோமளவல்லியாகிய கோதை, சூடிக்கொடுத்தாளின் செஞ்சொல்லைக் கேட்டனர் குற்றமற்ற குரவர் முதலிய புனிதர். ஆனால் இவ்வுலக மக்களின் இரு செவிகளிலும் கூடச் சென்று ஏறாத அறியாமை உடையதாக, ஏழையோர் அறிவற்று உரைத்த புன்சொல் அதனையும் இனிது உவந்து உட்கொள்வாயே “

என்பது இதன் பொருளாகும்.

அதாவது கோதையான ஆண்டாள் செய்தது சிறந்த அடிசில். ஆனால் நான் செய்ததுவோ உப்பில்லாத உணவு என்பதே அவையடக்கமாகும்.    அடுத்துசவ்வாதுப்புலவர்ஒன்பதுஆழ்வார்களயும்பழிச்சினர்ப்பரவலில்பாடுகிறார்.

”புழுகுஊற்றுஇருக்கும்முலைமலர்மங்கைகொழுநனைப்

புகழ்பொய்கைமுதல்மூவர், தென்

புதுவைகுறவஞ்சிமழிசையின்அதிபர்,பாகவதர்

பொன்னடித்தூளி, பாணன்

எழுகூற்றிருக்கைதாண்டகம்மடல்திருமொழி

இசைத்தபுகழ்ஆலிநாடன்

என்னும்ஒன்பதின்மர்பொன்னடிகளைப்போற்றுதூஉம்”

வாசனைஊற்றுபொங்கிஇருக்கும்முலைகளைஉடையமலர்மங்கையின்கொழுநனானதிருமாலைப்புகழ்பெற்றபொய்கைஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்ஆகியோர்பாடினார்கள். தென்புதுவை, குறவஞ்சி, மழிசையின்அதிபர்என்பனமுறையேபெரியாழ்வார், குலசேகரர், திருமழிசையாழ்வார்ஆகியோரைக்குறிக்கும். பாகவதர்பொன்னடித்தூளியாகிதொண்டரடிப்பொடியாழ்வார்பாடினார். திருஎழுகூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறியதிருமடல், பெரியதிருமடல், ஆகியவற்றைஎழுதியதிருமங்கையாழவாரும்போற்றிப்பாடினார். அப்படிப்பட்டஒன்பதுஆழ்வார்களைப்போற்றுவோம்” என்கிறார்சவ்வாதுப்புலவர்.

இந்தஒன்பதின்மர்தவிர்த்தநம்மாழ்வார், மதுரகவியாழ்வார்ஆண்டாள்ஆகியோரைஅவர்வேறுவேறுபாடல்களில்போற்றுகிறார். மேலும்ஒவ்வொருபருவத்திலும்அவர்ஆண்டாள்நாச்சியாரைஅதுஅதற்குத்தக்கபடிபோற்றுகிறார்.

செங்கீரைப்பருவத்தில் ’ஆடுகசெங்கீரை’ என்றும், தாலப்பருவத்தில் ‘தேனே! தாலேதாலேலோ’ என்றும், சப்பாணிப்பருவத்தில் ’புதுவைத்திருமகள்கொட்டுகசப்பாணி’ என்றும், முத்தப்பருவத்தில் ‘மெய்த்திருப்பாவைபாடித்தரும்கோவைவாய்முத்தம்அருளே’ என்றும், வாரானைப்பருவத்தில் ‘வடபெருங்கோயிலுள்கடவுள்மழகளிறுஅணையவளர்இளம்பிடி! வருகவே’ என்றும்,

அம்புலிப்பருவத்தில் ‘அரனும்இந்திரனும்நின்றுஅடிதொழும்கோதையுடன்அம்புலீ! ஆடவாவே!’ என்றும், சிற்றில்பருவத்தில் ‘தென்அரங்கேசன்முதல்ஐவரும்குடிபுகச்சிற்றிலைஇழைத்துஅருள்கவே!’ என்றும், சிறுசோற்றுப்பருவத்தில் ‘தேவர்ஆரமுதுஉண்ணஉளம்மகிழ்ந்துஅருள்கோதை! சிறுசோறுஇழைத்துஅருள்கவே!’ என்றும், சிற்றூசல்பருவத்தில் ‘பொன்னரங்கத்தர்வடமலைவாணர்இன்புறப்பொன்னூசல்ஆடிஅருளே’ என்றும்புலவர்பாடிமகிழ்கிறார்.

முன்பேகுறிப்பிட்டதுபோலகாமநோன்புப்பருவம்என்பதுஇப்பிள்ளைத்தமிழில்மட்டுமேகாணப்படுகிறஒருபருவமாகும். அதிலிருந்துஒருபாடல்:

 

’ஒருகரும்புஉருவவில்குமரன்அவன்; இருகரும்பு

உருவவில்குமரியாம்நீ;

ஒன்றுகண்காவிஅம்பாணத்தைஅளியநாண்

உறநின்றுஉடக்கும்அவன்; நீ

செருமுகத்துஉபயகண்காவிஅம்பாணம்

திருத்தகப்புகுமுகத்தால்

செஞ்செவேஅளியநாண்உறநின்றுஉடக்கிநிறை

திறைகொள்ளும்நோக்கத்திநீ

இருள்முகக்கங்குல்களிற்றுஅண்ணல்அவன்; நீ

இறைத்துஇறைத்துஈரம்வற்றாது

இழுக்குமான்மதம்உறக்கடபடாத்துடன்நிமிரும்

இணைமுலைக்களியானையாய்;

கருகுகில்குழல்அழகரைவெல்லஉருவிலாக்

காமன்ஏன்? வில்லிபுத்தூர்க்

கன்னியே! இனதுதிருஉருஒன்றும்அமையுமே!

காமநோன்புஅதுதவிர்கவே!

இப்பாடலில்புலவர், ஆண்டாளைநோக்கி, “அழகரைஅடையஉருவேஇல்லாதகாமனைவேண்டிஏன்நீநோன்புநோற்கவேண்டும்? அவரைவெல்லஉன்திருஒன்றேபோதுமே ‘ என்றுநயம்தோன்றப்பாடுகிறார்.

மேலும்அவர்,

“மன்மதனோஒருகரும்புவில்மட்டுமேஉடையவன்; நீயோஇரண்டுகரும்புவில்போன்றபுருவங்களைஉடையகுமரி; அவனுடையஅம்புசெங்கழுநீர்ப்பூ; அந்தஅம்பைநாணேற்றிப்போர்செய்வான்அவன்; நோயோநாணமும்கருணையும்இயற்கையாய்இருகண்களில்அம்புகளாய்க்கொண்டவள்; செருமுகத்துஉன்உபயகண்காவிநிறம்கொள்ளும்நோக்கத்திநீ;

அவன்இருள்முகக்களிற்றுஅண்ணலாவான்; ஆமாம்; அவன்யானைபோன்றஇருள்உடையவன்; நீயோசீலைமூடியயானையின்இருமத்தகங்கள்போன்றஇணைமுலைகளைஉடையகளியானை; இறைத்துஇறைத்தும்வற்றாதகஸ்தூரிமானாயிற்றேநீ;

எனவேஅழகரைவெல்லக்காமன்துணைஉனக்குஎதற்கு? ஆதலால்காமன்நோன்புதவிர்கவே” என்றுபக்தியும்இலக்கியமும்கலந்தபார்வையில்எழுதுவதுமனத்தில்நிற்கிறது.

இறுதியாகநாஞ்சில்நாடன்,

“மீனாட்சிஅம்மைப்பிள்ளைத்தமிழ்போல, திருச்செந்தூர்முருகன்பிள்ளைத்தமிழ்போல, முத்துக்குமாரசாமிப்பிள்ளைத்தமிழ்போல, அருமையானபிள்ளைத்தமிழ்ஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ்ஏன்சொல்வாரில்லாமல்போயிற்றுஎன்றுதெரியவில்லை”

என்றுவருத்தப்படுவதில்நியாயம்இருக்கத்தான்செய்கிறது.

பக்திரசமும்இலக்கியநயமும்இணைந்துதேன்போல்இனிக்கும்ஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழைநாமும்நுகர்ந்துஇன்புறுவோமாக.

————————————————————————————————————

 

Series Navigationகாலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்சகவுயிர்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *