திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம்

அர.வெங்கடாசலம்
ஐயா,
நான் எழுதி வெளியிட்டு உள்ள திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம் கடந்த 29.10.12 அன்று தினமணி நாளிதழில் வெளியாகி உள்ளது. அதனைக் கீழே தந்துள்ளேன். அதனைத் தங்கள் இதழில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திருக்குறள்- புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை

By அர.வெங்கடாசலம்
First Published : 28 October 2012 11:20 PM IST
திருக்குறள்- புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை – அர.வெங்கடாசலம்; பக். 570; ரூ.285; அர.வெங்கடாசலம், ஏ 19, வாஸ்வானி பெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்ஷன், பெங்களூர்- 560048.
திருக்குறளுக்கு ஏராளமான விளக்கவுரைகள் வெளிவந்துள்ளன. பொருளியல், மேலாண்மையியல், கல்வியியல், அறவியல், தத்துவவியல், சமூகவியல் என்று பல துறைகளின் கருத்துக் கருவூலமாகத் திருக்குறள் விளங்குகிறது என்பதைப் பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிப்படுத்தியுள்ளன. திருக்குறளுக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு மாறாக, அதில் பொதிந்துள்ள புதிர்த் தன்மையை விளக்கி அதற்கு உளவியல்ரீதியிலான விளக்கங்களை அளிக்கும் கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நூல்.
580 – க்கும் மேற்பட்ட குறள்களுக்கான பொதுவான விளக்கவுரை, அதில் காணப்படும் வழக்கமான புரிதலுக்கு மாறான புதிர் விளக்கம், மரபுரைகளில் காணப்படாத, தர்க்கரீதியான, ஏற்கத்தக்க புதுப்பொருளை உளவியல் முறையில் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.
சான்றாக, கண்ணோட்டம் என்ற சொல்லுக்கு, பழகியவர் உதவி கேட்குமிடத்து மறுக்க இயலாது, அவர்களிடம் அன்பு காட்டுவது என்று பொருள் கூறப்படுகிறது. ஆனால் கண்ணோட்டம் என்பது உளவியலில் உம்ல்ஹற்ட்ஹ் என்று கூறப்படும் சொல் எனவும் அடுத்தவருடைய தனிப்பட்ட பார்வையில் காணப்படும் உலகத்தில் நுழைந்து, அவர் பார்க்கும் உலகத்தை எவ்வித விருப்பு வெறுப்பின்றி பார்ப்பது எனவும் கூறுகிறார். அதனை அன்பு, ஒப்புரவறிதல் போன்ற அதிகாரங்களில் உள்ள குறள்கள் வழி விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.
திருக்குறளைப் புதுமையான வழியில் புரிந்து கொள்ளவும் விரிவான முறையில் அறிந்து கொள்ளவும் உதவும் சிறந்த ஆய்வு நூல்.
Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் !