‘படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு’என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. ‘தன் படைப்புகளில்கை வைக்கக்கூடாது’ என்று கறாராகச் சொல்லும் எழுத்தாளர்களும் உண்டு.பத்திரிகையின்கொள்கை, பக்க அளவு காரணமாக படைப்புகளைச் சுருக்கவோ,பகுதிகளை வெட்டவோ நேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தாளர்எழுதாததை – தன் கருத்தாக ஆசிரியர் சொல்ல நினைப்பதை – தான் பிரசுரிக்கும்படைப்பில் நுழைப்பதற்கு உரிமை எடுத்துக் கொள்வதைத்தான் புரிந்து கொள்ளமுடியவில்லை. எனக்கு அப்படி ஒருஅனுபவம் நேர்ந்தது.
ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகையில், ஒரு பிரபல நாவலுக்கு நான் மதிப்புரைஎழுதினேன். நாவலாசிரியர் புதியவர். இளைஞர். அதற்கு முன் பத்திரிகையில்எழுதிய அனுபவம் இன்றி, மு.வ போல நேரடியாக நூலாகப் பிரசுரிக்கப் பட்டுபெரிதும் பேசப்பட்ட நாவல் அது. என் மதிப்புரையை வெளியிட்ட இதழாசிரியர்மதிப்புரையின் இறுதி வரியாக ‘இந்த நாவலைப் படித்து முடித்ததும் புகழ் பெற்ற’………..’ என்ற ஆங்கிலநாவல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை’என்று சேர்த்து வெளியிட்டிருந்தார். எடுத்த எடுப்பிலேயே, இவ்வளவு சின்ன வயதில்இந்த எழுத்தாளருக்கு இப்படி ஒரு பிரபலம் கிடைத்திருப்பது அவரை உறுத்தியதோஎன்னவோ! தான் சொல்லமுடியாததை என் தலையில் கட்டி விட்டார்.
பிரசுரமான மதிப்புரையைப் பார்த்த எனக்கு, நான் எழுதாத அவதூறை நான்எழுதியதாக வெளியிட்டதில் எரிச்சல் ஏற்பட்டது. அடுத்த வாரம் அந்தப் பத்திரிகைஅலுவலகத்துக்குப் போன போது, ஆசிரியரிடம், “என்ன இப்படிச் செய்து விட்டீர்களே?நான் அப்படிக் குறிப்பிடவே இல்லையே!” என்று ஆதங்கப் பட்டேன். அதற்கு அவர்,”அதனால் என்ன? திரு.’……..’ தான் அப்படிச் சொன்னார். அவர் நிறைய ஆங்கிலநாவல்கள் படிப்பவர்!” என்றார் கொஞ்சமும் சங்கடமின்றி. “அப்படியானால் அவரையேஅப்படி எழுதச் செய்திருக்கலாமே! நாவலாசிரியர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?”என்று கேட்டேன். அதெல்லாம் ஒன்றும் நினைக்க மாட்டார். விடுங்கள்” என்றுகழற்றிக்கொண்டார். ஆனால், எனக்குப் பரிச்சயமான அந்த நாவலாசிரியரின் முகத்தில்எப்படிவிழிப்பது என்ற சங்கடம் எனக்கு ஏற்பட்டது.
பத்திரிகை ஆசிரியரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்ததுமே அந்தநாவலாசிரியரை வாயிலில் சந்திக்கும்படி நேர்ந்து விட்டது. குசலம் விசாரித்தபின் அவர் கேட்டார், “அந்த ஆங்கில நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா?”.எனக்குச் சங்கடமாகி விட்டது.’இல்லை! சத்தியமாக அதை எழுதியதும் நான் இல்லை!’என்று கத்தத் தோன்றியது. பதற்றத்தைக் குறைத்துக் கொண்டு நடந்ததைச் சொல்லிவருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன். இன்று மிகவும் பிரபலமாகி விட்ட அவர்,பெருந்தன்மையுடன் “போகட்டும் விடுங்கள்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.
கதைகளில் அல்லது கட்டுரையில் அவசியம் ஏற்பட்டு ஒரு வரி சேர்ப்பதால்படைப்புக்கு வலு ஏற்படும் என்று தோன்றினால் ஆசிரியர் உரிமை எடுத்துக்கொண்டு சேர்ப்பதை வேண்டுமானால் ஏற்கலாம். ஆனால் இப்படி தன் விருப்புவெறுப்புகளைக் காட்ட, படைப்பாளியின் எழுத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்உரிமையை எப்படி ஏற்க முடியும்? 0
வே.சபாநாயகம்.
- இந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்
- ஜெயகாந்தன் என்றொரு மனிதர்
- காட்சி மயக்கம்
- நிகழ்வுகள் மூன்று
- ஊரில் மழையாமே?!
- சதுரங்கம்
- மனவழிச் சாலை
- ஒரிகமி
- கணமேனும்
- அறிகுறி
- கவிதை
- தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !
- பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்
- ‘காதல் இரவொன்றிற்க்காக
- சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்
- பெற்றால்தான் பிள்ளையா?
- நெருப்பின் நிழல்
- நிழலின் படங்கள்…
- வட்ட மேசை
- மன்னிக்க வேண்டுகிறேன்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை
- மூன்று பெண்கள்
- (69) – நினைவுகளின் சுவட்டில்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)
- “பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
- அலையும் வெய்யில்:-
- ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 39
- இப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3
- மக்பூல் ஃபிதா ஹுசைன் – நீண்ட நெடிய கலை வாழ்வில் சில கரும்புள்ளிகள்